தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்த நாள் விழா ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டு பேரப்பள்ளியில் 3-வது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு M.ரஜினிகாந்த் அவர்களின் தலைமையில் ஓசூர் மாநகர வடக்கு பகுதி கழகச் செயலாளர் திரு.M. அசோகா, ஓசூர் மாநகர அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திருH.ஸ்ரீதர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கேக் வெட்டியும் பெண்களுக்கு புடவைகள் வழங்கி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி அம்மாவின் பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடினர்.

இவர்களுடன் 3-வது வார்டு வட்டச் செயலாளர் திரு.நஞ்சப்பா, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் திரு.லக்கப்பா, கிருஷ்ணகிரி மகளிர் அணி மாவட்டத் துணைச் செயலாளர் திருமதி. மங்கம்மா செல்லப்பா, திருமதி.அலமேலு மூர்த்தி, கழகப் பொறுப்பாளர்கள் திரு.காந்தராஜ், திரு.R.ரமேஷ், திரு.ரவி, திரு.G.பாபு, திரு.நாராயணன், திரு.வெங்கடேஷ், திரு.சதீஷ், திரு. கோவிந்தன், திரு.லோகேஷ், திரு.சந்திரன், திரு.பிரகாஷ், திரு.மாதேஷ், கழக முன்னோடிகள், கழகத் தொண்டர்கள் மகளிர் அணியினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு அம்மாவின் பிறந்தநாளை சீரும் சிறப்புமாக கொண்டாடினர்.
ஜி.பி.மார்க்ஸ்
செய்தியாளர் ஓசூர்