ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜூஜூவாடி 1-வது மற்றும் 2-வது வார்டு அதிமுக சார்பாக மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77 -வது பிறந்த நாளை ஓசூர் மாநகர அதிமுக பகுதி செயலாளர் திரு.M.அசோகா அவர்களின் தலைமையிலும், ஓசூர் மாநகர அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திரு.H.ஸ்ரீதர் அவர்களின் தலைமையிலும், கிருஷ்ணகிரி மாவட்ட அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் திரு. J.M. சீனிவாசன் அவர்களின் தலைமையிலும் அம்மாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி நல திட்டம் மற்றும் அன்னதானத்துடன் அம்மாவின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது,

இதில் 1-வது வார்டு வட்டச் செயலாளர் திரு. நாகிரெட்டி, ஓசூர் மாநகர தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் திரு. V.ராஜா வாசு, 2-வது வார்டு திரு.மாதேஷ், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் திரு.குமார், திரு.பிரகாஷ், திரு.சங்கர், மேலமைப்பு பிரதிநிதி திரு.சந்திரசேகர், செயற்குழு உறுப்பினர்கள் திரு. மஞ்சுநாத், திரு.சிவராஜ், திரு.அன்பு, அவைத்தலைவர் திரு. தனசேகரன் மற்றும் மகளிர் அணியினர், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஜிபி.மார்க்ஸ்
ஓசூர் செய்தியாளர்