கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியல் படிவங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு தற்பொழுது நிறைவு பெறும் கட்டத்தில் உள்ளது, அந்த வகையில் ஓசூர் மாநகராட்சி 17ஆவது வார்டு பகுதிக்கு உட்பட்ட தேசிங்கு நகர் பகுதிகளில் எஸ்.குமார் BLO தலைமையில் ஒவ்வொரு பகுதிகளாக சென்று பொதுமக்களை சந்தித்து சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் படிவங்களை விநியோகித்தும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை பெற்றும் தங்களின் கடமைகளை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர்.

1372 எண்ணிக்கையிலான அந்தப் பகுதியின் மொத்த படிவங்களில் பெரும்பான்மையான படிவங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டதாக எஸ்.குமார் BLO அவர்கள் தெரிவித்தார், படிவங்களை பூர்த்தி செய்வதில் சிரமப்படும் பொதுமக்களுக்கு தங்களின் குழுவினர் தொடர்ச்சியாக உதவி செய்வதாகவும் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மிகுந்த ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார்.
ஜி.பி.மார்க்ஸ்
செய்தியாளர்
