Tuesday, August 4, 2026
No menu items!
Google search engine
HomeUncategorizedஓசூரில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஓசூரில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் பேருந்து நிலையம் அருகில் கிருஷ்ணகிரி மாவட்ட திமுக, ஓசூர் திமுக இளைஞரணி மற்றும் திமுக மாணவரணி சார்பாக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை கைது செய்ததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக மாவட்ட அவைத்தலைவர் செந்தில் தலைமையில் நடைபெற்ற

கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.சீனிவாசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சுமன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கலைச்செழியன், மாநகர மாணவரணி அமைப்பாளர் ரத்தன் சிங், ஜி.ராமு ஓசூர் மாநகர் கிழக்குப் பகுதி திமுக செயலாளர், பேட்ரிக் பெர்னாண்டஸ் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர், வி.சீனிவாசன் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர், ஜி.கார்த்திக் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர், பாலாஜி, லோகேஷ் மாநகர இளைஞரணி, நவீன் ஓசூர் கிழக்குப் பகுதி இளைஞரணி ஆகியோர் கலந்து கொண்டு தமிழக அரசின் அராஜகப் போக்கை கண்டித்தும் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலினை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் கண்டன உரையாற்றினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்
ஜி பி மார்க்ஸ்

புகைப்படம்
ஆர்.கிருபானந்தம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments