கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் மாநகரில் ராம் நகர் அருகில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் முன்னாள் துணை முதல்வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் வேந்தர்கரசன் என்கின்ற வடிவேல் தலைமையில் மேற்கு மாவட்ட இணை செயலாளர் ஹரிஷ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பாத்திமா, மகளிர் அணி இணை அமைப்பாளர் செல்வி, மாநகர மகளிர் அணி அமைப்பாளர் லட்சுமி, பிரதீப் இளைஞர் அணி, மாணவரணி மற்றும் ஏராளமான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்,

தமிழக அரசியலின் மாண்பை கெடுக்கும் விதமாக தஞ்சையில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை கடும் சட்ட பிரிவுகளின் கீழ் உட்படுத்தி கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்கின்ற கோரிக்கையையும் வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர், இந்த ஆர்ப்பாட்டத்தினால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர்
ஜி.பி மார்க்ஸ்
புகைப்படம்
ஆர். கிருபானந்தம்
