தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் கண்ணுக்குடி கிழக்கு ஊராட்சி, இந்த ஊராட்சியில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி கண்ணுகுடி கிழக்கு ஊராட்சிக்கு உட்பட்ட கொடியாளம், பரவத்தூர், காந்தி காலனி பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட கிராம மக்களும் பெரியார் அம்பேத்கர் மக்கள் கழக நிர்வாகிகளும் நேற்று காலை ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முகப்பு வாசற்படியில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மதியம் 2 மணியளவில் ஒரத்தநாடு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, விஜய் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்களின் குற்றச்சாட்டு மற்றும் கோரிக்கைகளை குறித்து விரைவில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனை அடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
செய்தி : சரண்