தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் குற்றச்செயலில் ஈடுபட்ட தஞ்சை நெடார் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன், திருச்சி வாழவந்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்த நாகராஜ் உள்ளிட்ட இருவரை தஞ்சை எஸ்.பி உத்தரவின் பெயரில் ஒரத்தநாடு உதவி காவல் கண்காணிப்பாளர் தலைமையில், ஒரத்தநாடு ஆய்வாளர் மற்றும் காவல் தனி படையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து இருந்து 12 சவரன் நகை, இரு சக்கர வாகனம் ஒன்று மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணம் கைப்பற்றுள்ளது. இந்த இருவரும் இப்பகுதியில் நீண்ட குற்றங்களில் ஈடுபட்டவர்கள் எனவும் தெரிய வருகிறது.