தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் ஒசூர் புத்தகத் திருவிழா 2025 ஜூலை மாதம் நடைபெற இருக்கிறது. 14-வது புத்தகத் திருவிழாவின் வரவேற்புக்குழு மற்றும் ஆலோசனை கூட்டம் சப்தகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 15.02.25 மாலை 5 மணியளவில் குறும்பட திரையிடலுடன் துவங்கியது.
புத்தகத்திருவிழா செயலாளர் பெ.சந்துரு அனைவரையும் வரவேற்றார். புத்தகத் திருவிழா தலைவர் ஆடிட்டர் பழ.பாலசுந்தரம் அவர்கள் தலைமை உரையில் ஒசூர் புத்தகத் திருவிழா கடந்து வந்த பாதைகளை நினைவுபடுத்தி பேசினார். பொருளாளர். ஆர்.பாலகிருஷ்ணனன் சென்ற 2024 ஆண்டு புத்தகத் திருவிழா மீள்பார்வை பற்றி தெரிவித்தார். மதிப்புறு தலைவர்.முனைவர் பேரா. கு வணங்காமுடி அவர்கள் 14 ஆவது புத்தகத் திருவிழா 2025 சிறப்புற நடத்துவது பற்றிய ஆலோசனயை முன் வைத்தரர். திருமிகு. சிவந்தி அருணாசலம், கருமலைத் தமிழன் , அறம் கிருட்ணன். சிறகுகள் யுவராஜ் என பலரும் சிறப்பான ஆக்கபூர்வமான ஆலோசனையை வழங்கினர்கள்.

ஆலோசனகளை புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் திருமிகு.எஸ்.ஆர்.சேதுராமன் மற்றும் சிவகுமார் துணைத் தலைவர் பரிசீலனை செய்து சாத்தியமானதை அனைவரின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றலாம் என உறுதியளித்தனர். பின்னர் 14 ஆவது புத்தகத திருவிழா நிர்வாகிகளையும் அதன் ஆலோசனைக் குழுக்களையும் அறிமுகப்படுத்தினார்.
புத்தகத் திருவிழா முன்னாள் தலைவர். திருமிகு இராமலிங்கம் அவர்கள் நேரில் வருகை தந்து வாழ்த்து தெரிவித்தார்.
புத்தகத் திருவிழா இணை செயலாளர் . அரிச்சந்திரன் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது
அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.
M. நந்தகுமார்
கிருஷ்ணகிரி செய்தியாளர்