அக்டோபர் 15,16 தேதிகளில் பாகிஸ்தானில் நடைபெறும் சாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாலஸ்தீனம் மற்றும் லெபனான் உள்ளிட்ட ஆதரவு நாடுகள் மீது இஸ்ரேல்,அமெரிக்க கூட்டு தாக்குதலை கண்டித்து இந்தியா கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்! இந்தியா பாலஸ்தீன நட்புறவு கழகம் இந்திய ஒன்றிய அரசுக்கு கோரிக்கை இஸ்ரேலின் பாலஸ்தீன இனப்படுகொலைக்கு எதிராக இந்தியாவில், தமிழ்நாட்டில் இந்தியா- பாலஸ்தீன நட்புறவுக் கழகம் உருவாக்கப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நட்புறவு கழகம் அமைப்புக்கள் அமைக்கப்பட்டு வருகிறது.இதன் மாநில தலைவர் கசி.விடுதலைக்குமரன், பொதுச் செயலாளர் இரா.அருணாச்சலம் ஆகியோர் இன்று காலை 11 மணிக்கு தஞ்சாவூரில் பத்திரிகையாளர்களுக்கு அளித்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளதாவது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னதாக தனக்கென நாடு இல்லாத நிலைமையில் பாலஸ்தீனர்கள் ஆதரவு தந்ததன் அடிப்படையில் இஸ்ரேல் நாடு உருவானது.படிப்படியாக இஸ்ரேல் தனது ஆளுமையை பயன்படுத்தி வல்லரசாக மாறியுள்ளது . தனது நாடு பிடிக்கும் ஆசையில் பாலஸ்தீனத்தின் மீது தொடர்ந்த தாக்குதல் தொடுத்து வருகிறது. சமீபத்தில் ஓராண்டுக்கு மேலாக பாலஸ்தீன காசா நகரின் மீது இஸ்ரேல் தொடுத்த தாக்குதல் விளைவாக சுமார் 50,000 க்கும் மேற்பட்ட முதியவர்கள்,பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவி பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் அரசு பாலஸ்தீனியர்களை இனப்படுகொலை செய்து வருகிறது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உள்ள லெபனான், சிரியா, ஏமன், ஈரான் உள்ளிட்ட நாடுகள் மீதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கூட்டுசேர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இந்திய ஒன்றிய அரசும் இஸ்ரேலுக்கு ஆதரவாக மறைமுக ஆதரவை அளிப்பதுடன் ஆயுதங்களையும் வழங்கி வருகிறது. இதை நாட்டின் அனைத்து கட்சிகளும், முற்போக்கு, ஜனநாயக இயக்கங்களும் கண்டித்துள்ளன. இஸ்ரேல் தாக்குதல் உலக அளவில் மிகப் பெரும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது. உடனடியாக ஐநா சபை இஸ்ரேல்,அமெரிக்க ஏகாதிபத்திய கூட்டு தாக்குதலை கண்டிக்க வேண்டும். தடுத்து நிறுத்த வேண்டும். பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் கண்டன பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டிலும் தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வருகிற அக்டோபர் 15,16 தேதிகளில் பாகிஸ்தானில் நடைபெறும் சாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்திய நாட்டின்,மக்கள் சார்பாக ஒன்றிய அரசு பாலஸ்தீனர்கள் மீதான இனப்படுகொலையை தடுத்து நிறுத்தவும், லெபனான் உள்ளிட்ட ஆதரவு நாடுகள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தவும், பாலஸ்தீனியர்களின் இறையாண்மையை பாதுகாக்கவும் வலியுறுத்தியும் கண்டன தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று இந்தியா பாலஸ்தீன நட்புறவுக் கழகத்தின் சார்பாக ஒன்றிய அரசுக்கு வேண்டுகோளை வைக்கிறோம்.இதனை வலியுறுத்தி தஞ்சாவூரில் அக்டோபர் 15 ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தஞ்சாவூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் இடதுசாரிகள், ஜனநாயக சக்திகள், ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்ற சிறப்பிக்க வேண்டுகிறோம் என்று இந்தியா பாலஸ்தீன நட்புறவு கழகத்தின் மாநில தலைவர் கசி.விடுதலை குமரன், பொதுச் செயலாளர் இரா.அருணாச்சலம் உள்ளிட்டோர் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். செய்தி:: துரை . மதிவாணன்.