Thursday, September 19, 2024
No menu items!
Google search engine
HomeUncategorizedஇறுதி கட்டத்தை நெருங்கிய "GOAT " தமிழ்நாட்டில் FDFS எப்போது?

இறுதி கட்டத்தை நெருங்கிய “GOAT ” தமிழ்நாட்டில் FDFS எப்போது?

தமிழகத்தின் முன்னணி நடிகரான விஜய் தனது அரசியல் வருகையை அறிவித்து அவர் இறுதியாக நடிக்கும் திரைப்படம் the greatest of all time (GOAT). இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. GOAT திரைப்படம் செப்டம்பர் 5 நாளை வெளியாக உள்ள நிலையில் இன்று திரைப்படத்திற்கான முன்பதிவு இணையதளத்தில் வெளியான சில மணி நேரங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் காலியாகிவிட்டது. இருப்பினும் தமிழகத்தில் இந்த திரைப்படத்திற்கான முதல் காட்சி எப்பொழுது துவங்கும் என்று கேள்வி கேள்விக்குறியாகவே உள்ளது?

இந்தத் திரைப்படம் தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய இடங்களில் அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி ஒளிபரப்பாகிறது. இருப்பினும் தமிழக அரசு அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி வழங்காத நிலையில் தயாரிப்பு நிறுவனத்தின் வேண்டுகோள் கிணங்க காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை திரையரங்குகளில் திரைப்படம் ஒளிபரப்பாகும் என்று தகவல் கிடைத்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பல முன்னணி நடிகர்கள் சிறப்பு தோற்றத்தில் தோன்றுவது போன்ற பல தகவல்கள் கசிந்து வரும் நிலையில் இந்த திரைப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி கலவை விமர்சனத்தையும் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் சிறப்பாக அமையும் பட்சத்தில் 1000 கோடி வசூலை தாண்டலாம் என்று திரைப்பட வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. இப்படி பல விமர்சனங்களுக்கும், எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கோட் திரைப்படம் நாளை தமிழகம் முழுவதும் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தில் வயதை குறைத்து காட்டும் de ageing தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விஜய் இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும் 350 கோடி செலவில் எடுக்கப்படும் இந்த திரைப்படத்தில் விஜய் சம்பளமாக 200 கோடி கொடுக்கப்பட்டது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படிப்பட்ட பல சுவாரசியமான தகவல்களுக்கு மத்தியில் வெளியாகும் கோட் திரைப்படம் எப்படி இருக்கும் என்று ஆர்வத்தில் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

செய்தியாளர்
அ.காவியன்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments