கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த அங்கினாம்பட்டி கிராமத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அங்கினாம்பட்டி கிளை சார்பாக மாவட்ட தலைவர் சக்தி தலைமையில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் திமுக பிரமுகர் சஞ்சீவ் குமார் முன்னிலை வகிக்க சிறப்பு விருந்தினர்களாக காந்தி மற்றும் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வை ஜி.முருகன் தொகுத்து வழங்கினார். இறுதியாக விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சின்ன கவுரன் பரிசளித்தனர். நிகழ்வை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கிளை நிர்வாகிகள் விஜய் ஆனந்த், சம்பத், ஜெயசீலன், சிவக்குமார் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். சிறப்பு விருந்தினர்களுக்கு போட்டியின் முடிவில் கௌரவிக்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முதல் மூன்று இடங்கள் பிடித்தோர்க்கு மெடல் வழங்கப்பட்டது. அங்கினாம்பட்டி சமத்துவ பொங்கல் விழா தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர். 100-க்கும் மேற்பட்டோர் பரிசுகளும் பெற்றனர்.
M.நந்தகுமார்
கிருஷ்ணகிரி செய்தியாளர்