தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் கிளை சார்பாக நேற்று (24.01.25) மத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கோள்களின் அற்புத அணிவகுப்பு நிகழ்ச்சியை
தொலைநோக்கி மூலம் காண
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மத்தூர் கிளை ஒருங்கிணைப்பில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வட்டார தலைவர் ராஜா அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சௌந்தரபாண்டியன் அவர்கள் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் சர்ஜான் கோள்களின் அணிவகுப்பு பற்றிய கருத்துரையை வழங்கினார். முன்னாள் மாவட்ட இணை செயலாளர் ஜெகந்நாதன் அவர்கள் தொலைநோக்கி மூலம் கோள்களை மாணவிகளை பார்வையிடச் செய்து விளக்கினார்.

பள்ளியின் தலைமை ஆசிரியரும் தமிழ்நாடு அறிவியல் இயகக கௌரவ தலைவருமான ஆனந்திமாலா அவர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்தும் சிறப்புறையும் வழங்கினார். பள்ளி ஆசிரியர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். நிகழ்ச்சியில் 250 ககும் மேற்பட்ட மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் கண்டுகளித்தனர். நிகழ்வின் மூலம் மாணவிகள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.
M. நந்தகுமார்
செய்தியாளர் கிருஷ்ணகிரி