கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மத்தம் அக்ரஹாரம் பகுதியில் அமைந்துள்ள மூக்கண்டபள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2-ஆம் ஆண்டு ஆண்டு விழா பிப்ரவரி 28 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் குறிஞ்சி,முல்லை, மருதம்,நெய்தல், பாலை ஆகிய ஐந்து நிலங்களின் தலைப்பில் நடனமாடி பார்வையாளர்களை வெகுவாக கவர்னர், மேலும் வாழ்வின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் நாடகங்கள் நடத்தி அசத்தினர்.இந்த ஆண்டு விழாவை தலைமை ஆசிரியை ராணி மற்றும் ஆசிரிய பெருமக்கள் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தியாளர் ஜே.ஜூலியட் கிறிஸ்டினா