அதிராம்பட்டினம் அருகே உள்ள தம்பிக்கோட்டை செக்போஸ்ட் அருகே உள்ள ஐயப்பன் கோயில் குளத்தில் பிறந்து 15 நாட்களே ஆன ஆண் குழந்தையின் உடல் மிதப்பதாக அப்பகுதி மக்கள் அதிராம்பட்டினம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் தகவல் அறிந்த அதிராம்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து இஸ்லாமிய தன்னார்வ இளைஞர்கள் காவல் துறை அதிகாரிகள் சேர்ந்து அடக்கம் செய்தனர். இது தொடர்பாக அதிராம்பட்டினம் காவல்துறை வழக்கு பதிவு செய்து அந்த குழந்தையை வீசி சென்றது யார் ? எதற்காக வீசி சென்றனர்? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.