Sunday, December 8, 2024
No menu items!
Google search engine
HomeUncategorizedஅதிராம்பட்டினத்தில் கடத்தி வரப்பட்ட 117 கிலோ கஞ்சா சிக்கியது..!

அதிராம்பட்டினத்தில் கடத்தி வரப்பட்ட 117 கிலோ கஞ்சா சிக்கியது..!

தஞ்சை மாவட்டம்    அதிராம்பட்டிணம் பகுதியில் மாருதி  பொலினோ  காரில் ( TN63 AR 2979 )கஞ்சா கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் அந்தப் பகுதியில் வாகன சோதனை செய்த பொழுது இந்த வாகனத்தினை திருவெறும்பூர் காவல் நிலையத்தில் 2013 ம் ஆண்டு  காவல் காவலராக பணி செய்து,  அதன் பிறகு திருச்சி முக்கொம்புபகுதியில் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக அக்டோபர் 2023 முதல் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சங்கர ராஜபாண்டியன்  மற்றும் அவரது உறவினர் தவமணி ( வயது 26) இருவரும் வந்த காரை நிறுத்தி போலீசார்  சோதனை செய்த பொழுது அந்த வாகனத்திற்குள் 117 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா  நான்கு மூட்டைகளில் கட்டி எடுத்து வந்த தெரிய வந்தது. 

அதனைத் தொடர்ந்து அந்த கார் மற்றும் நான்கு மூட்டை  ( 117 கிலோ) கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக பட்டுக்கோட்டை மற்றும் அதிராம்பட்டினம் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா சகஜமாக மாணவர்களுக்கு கிடைப்பது பற்றி பெற்றோர்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளது பற்றி பலமுறை செய்திகள் வெளியிட்டும் கஞ்சாவை ஒழிப்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இருப்பது பெற்றோர்களுக்கு பெரும் வேதனை அளிப்பதாக கூறுகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments