திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் ரெகுலர் லாரி செட்டுகளில் 350 சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில் ஒரு லாரி செட்டில் 20 ஆண்டுகளாக வேலை செய்து வரும் 12 தொழிலாளர்களுக்கு வேலை வழங்காமல் அவர்களுக்கு பதிலாக வெளிமாநில தொழிலாளர்களை வைத்து வேலை செய்வதையும், இப்பிரச்சனை குறித்து காவல்துறை பரிந்துரையின் பேரில் தொழிலாளர் இணை ஆணையர் விசாரணை செய்து 12 தொழிலாளர்களுக்கும் வேலை வழங்க வேண்டும் என எழுத்துப்பூர்வமாக உத்தரவு பிறப்பித்து 32 நாட்கள் ஆன பின்பும் அரசு அதிகாரிகள், காவல் துறையினர் 12 தொழிலாளர்களை வேலைக்கு சேர்க்க எந்த நடவடிக்கை எடுக்காமல் லாரிகளில் வந்த சரக்குகளை போலீசார் பாதுகாப்புடன் மாற்றுத் தொழிலாளர்களை வைத்து இறக்கப்பட்டதை கண்டித்தும். கடந்த 70 நாட்களுக்கு மேலாக வேலையிழந்துள்ள 12 சுமைப்பணி தொழிலாளருக்கும் உடனடியாக வேலை வழங்க கோரியும் காந்தி மார்க்கெட் அனைத்து சுமைப்பணி தொழிலாளர்கள் கூட்டமைப்பு
சார்பில் செவ்வாய்க்கிழமை அன்று மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு லாரி புக்கிங் ஆபீஸ் ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் மாவட்ட செயலாளர் ஜி .கே .ராமர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா, சுமைப்பணி சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார், சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன்,
மாவட்ட தலைவர் மணிமாறன், இங்கிலீஷ் காய்கறி சங்க மாவட்ட தலைவர் சின்னதுரை,தரைக்கிடை சங்க மாவட்ட செயலாளர் செல்வி, மாவட்ட தலைவர் கணேசன்
ஆகியோர் பேசினர். பின்னர் மரக்கடையில் இருந்து
காந்தி மார்க்கெட் வரை ஊர்வலகமாக சென்று அங்கு உண்ணா போராட்டத்தில் ஈடுபட சென்றவர்களை
போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 25க்கும் மேற்பட்ட சுமைப்பணி தொழிலாளர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்

