மயிலாடுதுறை AVC college ல் B.com இரண்டாம் ஆண்டு படித்து வரும் புவனேஸ்வரியின் பெற்றோர் மாடு வளர்ப்பு மற்றும் விவசாயம் செய்து வருகின்றனர் இந்நிலையில் குணசேகரன் என்பவர் புவனேஸ்வரி யின் வீட்டிற்கு கடந்த மூன்று மாதமாக பால் ஊற்றி வந்த நிலையில் தினமும் பால் ஊற்ற புவனேஸ்வரி குணசேகரன் வீட்டிற்கு சென்றபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பழகி வந்துள்ளனர்.

குணசேகரனுக்கு மைதிலி என்ற மனைவியும் ஒரு பெண்பிள்ளை ஒரு ஆண் பிள்ளை உள்ளது. இந்நிலையில் குணசேகரன் புவனேஸ்வரியை திருமணம் செய்யுமாறு கட்டாயப்படுத்தி வருகிறார் கல்லூரிக்கு செல்லும் போதும் வரும் போதும் தொந்தரவு செய்து வந்துள்ளார். அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் புவனேஸ்வரி 02.07.2025 ஆம் தேதி மாலை தனது வீட்டில் வயலுக்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டார் . குடித்த அவரை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை சேர்த்து முதலுதவி அளிக்கப்பட்டு புளியம்பேட்டை தனியார் மருத்துவமனையில் மிட்வே மருத்துவமனைக்கு சேர்த்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி அவர் என்று உயிரிழந்துள்ளார். இந்த தகவலை அவர் மருத்துவமனையில் இருக்கும்போது அவரிடம் காவல்துறை மரண வாக்குமூலமாக பதிவு செய்துள்ளது. இந்நிலையில்
குற்றவாளி குணசேகரன் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு திருவிடைமருதூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
செய்தி – வெற்றி