வைகோ மேற்கொள்ளும் சமத்துவ நடைபயணம் தான் என் இந்தாண்டின் முதல் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.பொது வாழ்க்கையில் தமிழ்நாட்டில் தன் காலடி படாத இடங்களே இல்லை என மக்கள் பிரச்சனைகளுக்காக நடைபயணம் மேற்கொண்டவர்
நெஞ்சுரத்தையும் ஸ்டாமினாவையும் பார்க்கும் போது அவருக்கு 82 வயதா அல்லது 28 வயதா என எண்ண தோன்றுகிறது.
இளைஞர்கள் நலனுக்காகவும் எதிர்காலத்தின் வளர்ச்சிக்காகவும் செயலாற்றும் இயக்கம் தான் திராவிட இயக்கம்.
தன் தள்ளாத வயதிலும் தமிழர்களுக்காக உழைத்து இறுதி மூச்சு வரை பாடுபட்டவர் தந்தை பெரியார்.
அவர் வழியில் வந்த கலைஞர் 80 ஆண்டு பொது வாழ்விற்கு சொந்தக்காரர் சக்கர நாற்காலியில் அமர்ந்தும் மக்களுக்காக உழைத்தவர்
அப்படிப்பட்ட திராவிட யூனிவர்சிட்டியில் படித்தவர் தான் வைகோ அவர்கள். நானும் அந்த யுனிவர்சிட்டி மாணவன் தான்.

