மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர். சீத்தாராம் யெச்சூரி வயது 72 உடல்நிலை பாதிப்பின் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். தோழரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில்
மயிலாடுதுறை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மயிலாடுதுறை நகரில் அமைதிப் பேரணியும் தலைமை அஞ்சலகம் அருகில் அஞ்சலி கூட்டமும் நடைபெற்றது. இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட மார்க்சிஸ்ட் செயலாளர் P.சீனிவாசன், மாவட்ட செயற்குழு தோழர்கள் G.ஸ்டாலின், S.துரைராஜ், மாநில குழு உறுப்பினர்கள் A.V.சிங்காரவேலு, B.S.பாரதி அண்ணா, மூத்த தோழர்கள் குஞ்சிதம் பாரதி மோகன், D.கணேசன், G.கலைச்செல்வி, T.கோவிந்தசாமி, திராவிடக் கழக மாவட்ட செயலாளர் கி.தளபதி ராஜ், திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் மகேஷ், காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்கள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மறைந்த தோழரின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி உரை நிகழ்த்தினார்கள் மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு, நகர குழு, தாலுக்கா கமிட்டி, கிளை கமிட்டி தோழர்கள் பெருந்திரளாக கலந்து கலந்து கொண்டனர்.