அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி பட்டுக்கோட்டையில் கட்டிடவியல் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் திரளான கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள் பத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கு பெற்று மாணவர்களின் திறமையின் அடிப்படையில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி ஆணை புல முதல்வர் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் முன்னிலையில் வழங்கப்பட்டது.
முடிவில் வேலை வாய்ப்பு வழங்கிய நிறுவனங்களுக்கும், கலந்து கொண்ட மாணவர்களுக்கும், கட்டிடவியல் துறை தலைவர் முனைவர் கோ .இளங்கோவன் அவர்கள் நன்றி கூறினார்..