மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியம், வெள்ளலாகரம் பஞ்சாயத்தை சேர்ந்த ஜோதி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 200 குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் மட்டும் தொடர் மின்வெட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அப்பகுதி சேர்ந்த மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மற்றும் CM help line ல் மனுவும் அளித்துள்ளனர். மின்மாற்றி குறைந்த திறன் உடையதாக இருப்பதால் அதிக மின்வெட்டு நடைபெறுவதாக கூறியுள்ளனர் . இதனை மாற்றி மின்வெட்டு இல்லாமல் சரி செய்து கொடுக்குமா? தமிழ்நாடு மின்சார வாரியம்.
இங்கு முதியோர்கள், நோயாளிகள் மற்றும் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இருப்பதால் அவர்கள் தொடர் மின்வெட்டால் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
எனவே இந்தத் தொடர் மின்வெட்டை சரி செய்யவேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.
மயிலாடுதுறையிலிருந்து
செய்தியாளர் –
பிரவீன் குமார்
அரசியல் டைம்ஸ் பத்திரிகை.