கறம்பக்குடியில் இயங்கி வரும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் கரம்பக்குடியை விட்டு வெளியே கொண்டு செல்வதை தடுத்திடும் வகையில், கரம்பக்குடியிலேயே தொடர்ந்து இயங்கிட வலியுறுத்தி அனைத்து கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
வட்டார காங்கிரஸ் தலைவர் ஞானசேகரன் தலைமை ஏற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் அரிபாஸ்கர் வரவேற்றார்.
கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் தோழர்.சின்னத்துரை கலந்து கொண்டு பேசினார். காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, இ.க.மார்க்சிஸ்ட் லெனின்ஸ்ட் கட்சி, மதிமுக, மனிதநேய ஜனநாயக கட்சி, மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தின் முடிவாக எதிர்வரும் 22.07.2025 -ஆம் தேதி கரம்பக்குடியில் வர்த்தக, வியாபாரி சங்கத்தினர் நடத்தும் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவளித்தும். அன்றைய தினம்
அனைத்துக் கட்சிகள் சார்பில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சேசுராஜ் நன்றி கூறினார் .