திருச்சி தில்லைநகர் சாஸ்திரி ரோடு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 42) இவர் சொந்தமாக கார் வைத்துக் கொண்டு சவாரி செல்வது வழக்கம்.இந்த நிலையில் நேற்று வீட்டிற்கு சந்தோஷ் குடிப்போதையில் வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த சந்தோஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் சேலையில் தூக்கு மாட்டி
தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி காந்தி உடனடியாக தில்லைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தோஷ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளம்பரம்:-