பதவி உயர்வு பிரச்சனையை தீர்க்கக்கோரி
அடுத்த மாதம் தொடர் போராட்டம்
தமிழ்நாடு உதவி ஆணையர்/வணிகவரி அலுவலர் சங்க மாநில செயற்குழுவில் தீர்மானம்
திருச்சி,
தமிழ்நாடு உதவி ஆணையர் /
வணிகவரி அலுவலர் மற்றும் துணை வணிகவரி அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் இன்று திருச்சியில் நடந்தது மாநிலத் தலைவர் க.லட்சுமணன் தலைமை தாங்கினார்.
பொதுச் செயலாளர் ஜனார்த்தனன் , பொருளாளர் விஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர் முன்னதாக கோட்ட தலைவர் பொன்னுசாமி
வரவேற்றார்.
இதில் தமிழக முழுவதும் இருந்து வணிகவரித்துறை உதவி ஆணையர்கள் வணிகவரி அலுவலர்கள் துணைவினை அலுவலகத்தில் கலந்து கொண்டனர்
கோட்ட செயலாளர் கேசவன் கோட்ட பொருளாளர்
கே.ராமச்சந்திரன்,
மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாநில தலைவர் லட்சுமணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழகத்தின் மொத்த வருவாயில் 80 சதவீத
வருவாய் ஈட்டி கொடுக்கும் வணிகவரித்துறையில் 30 ஆண்டு காலமாக
முதுநிலை பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளது.
பதவி உயர்வுகள் வழங்கப்படாத காரணத்தினால் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.
இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதில் தமிழக அரசும், வணிகவரித் துறையும் விரைந்து செயல்பட்டு காலிப் பணியிடங்களை நிரப்பினால் மேலும் வருவாயை ஈட்ட முடியும். மேலும் பல கோரிக்கைகள்
தீர்க்கப்படாமல் உள்ளது. எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு சங்கப் பிரதிநிதிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்திய தீர்க்க வேண்டும் இல்லை என்றால் ஜனவரி மாதம் முதல் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். அதன்படி 2026ம் ஆண்டு ஜனவரி 7ந்தேதி அன்று முதல் முதுநிலை பிரச்சனையை விரைந்து தீர்க்கக் கோரி நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் அனுப்புவது, ஜனவரி 21ந்தேதி அன்று நிலுவை கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து பணி புரிதல் மற்றும் கோட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது ஜனவரி 30 ந் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது கோரிக்கைகளில் முன்னேற்றம் இல்லையெனில் அடுத்த செயற்குழுவில் அடுத்த கட்ட தீவிரப் போராட்ட நடவடிக்கைகள் திட்டமிடப்படும் .
இவ்வாறு அவர் கூறினார்.

