திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் புதிதாக கட்டப்படுவதால். மாற்று பேருந்துகள் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி
முசிறி நாமக்கல்லில் இருந்து வரும் பேருந்துகள் பழைய பேருத்தில் மக்களை இறக்கிவிட்டு பெரம்பலூர் செல்லும் வழியாக செல்லுமாறு நகராட்சி நிர்வாக துறையால் அறிவிக்கப்பட்டுள்ளன.
துறையூர் பிரிவு ரோடு ரவுண்டானத்தில் மக்களை இறக்கிவிட்டு புதிய பேருந்து நிலையத்திற்கு அப்படியே செல்வதால் மக்கள் பழைய பேருந்து நிலையம் செல்ல மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
பிரிவு ரோடு ரவுண்டானத்தில் இருந்து நடந்து செல்லவேண்டிய நிலையில் அந்த வழியாக செல்லும் பேருந்துகள் 10 ரூபாய் டிக்கெட் பெறப்படுகிறது என்று மக்கள் கூறுகின்றனர்…..

