திருச்சி மாநகராட்சி மண்டலம் – 5 ன் வார்டுகுழுக் கூட்டம் 5 -வது மண்டல குழு அலுவலகத்தில் மண்டலக்குழுத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் உதவி ஆணையர் சீனு கிருஷ்ணன்,
உதவி செயற் பொறியாளர் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் விஜயா ஜெயராஜ், கமால் முஸ்தபா, எஸ்..நாகராஜன், வெ.ராமதாஸ், முத்துக்குமார், எஸ்.விஜயலட்சுமி , நாகலட்சுமி நம்பி, பங்கஜம் மதிவாணன், சோபியா விமலா ராணி, சுரேஷ்குமார், இளநிலை பொறியாளர்கள் ரமேஷ், சந்திரசேகர், வினோத், சகாயம்,நிர்வாக அலுவலர் துரை, உதவி வருவாய் அலுவலர் தாமோதரன், சுகாதார அலுவலர் இளங்கோவன், சுகாதார ஆய்வாளர்கள் ஆல்பர்ட், பன்னீர்செல்வம், கண்காணிப்பாளர் சிராஜ் நிஷா, மற்றும் அலுவலர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மண்டலம் 5 -க்கு உட்பட்ட வார்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசித்து, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.