உங்களுக்கு காய்ச்சல் உடல் கோளாறு ஏற்பட்டு உடலில் நீர் சத்து இழப்பு ஏற்பட்டால் முதலில் மருத்துவமனைக்கு செல்வோம். அப்படி மருத்துவமனைக்கு செல்லும் பொழுது மருத்துவரால் முதலில் பரிந்துரைக்கப்படும் ors என்ற போலியான சக்கரை கரைசல் பானங்கள் தற்போது தமிழ்நாடு முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
ORS என்று அட்டை படங்களில் கொட்ட எழுத்தில் போட்டுவிட்டு பின்புறத்தில் இவை ஒஆர்எஸ் கரைசல் இல்லை என்று அச்சிட்டு விற்பனை செய்த போலியான சக்கரை கரைசல் பானங்கள் தமிழ்நாட்டில் சுகாதாரத் துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் அவர்களால் தடை செய்யப்பட்டுள்ளது.

ஓ ஆர் எஸ் என்றால் என்ன?
காய்ச்சல் போன்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு உடலில் நீர் இழப்பு பாதிப்பு ஏற்படும் பொழுது மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் வானமே ஒவ்ஆர்எஸ். இதில் குளுக்கோஸ் சோடியம், பொட்டாசியம் மற்றும் பிற எலக்ட்ரோ லைட்டுகள் கலக்கப்படும். இதனால் உடலில் ஏற்பட்ட நீர் இழப்பு பாதிப்புகள் சமன் செய்யப்படும். இந்த நிலையில் ஓ ஆர் எஸ் எல், ஓ ஆர் எஸ் எஸ் எல், ஓ ஆர் எஸ் எல் பிளஸ் , ஓ ஆர் எஸ் பிட் போன்ற பெயர்களில் ors கரைசல்களை மருந்தகங்களில் விற்க மதிய உணவு பாதுகாப்பு துறை 15ஆம் தேதி தடை விதித்து உத்தரவை பிறப்பித்தது. வயிற்றுப்போக்கு வாந்தி போன்ற உடல் உபாதைகளால் நீர் இழப்பு ஏற்படும் பொழுது தேசிய சுகாதார அமைப்பு மற்றும் தேசிய காசநோய் அமைப்பாள் அங்கீகரிக்கப்பட்ட ஓஆர்எஸ் கரைசலை மட்டுமே மருத்துவர்கள் பரிந்துருக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிட்ட இதர சக்கரை கரைச்சர்களே மருதங்களில் விற்பனை செய்யக்கூடாது எனவும் தடை விதித்துள்ளது.
செய்தியாளர்
காவியன் அ

