பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல என்கிற மாதிரி தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் புண்ணியமூர்த்தி பெயரை கேட்டாலே கதறி ஓடுகின்றனர் திமுக உடன் பிறப்புகள். நான்தான் அறிவாலயம் நான் வைப்பது தான் இங்கு சட்டம் என்னை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது அது மாவட்ட செயலாளராக இருந்தாலும் சரி அமைச்சராக இருந்தாலும் சரி என கெத்தா வலம் வருகிறார் புண்ணியமூர்த்தி. யார் இந்த புண்ணிய மூர்த்தி ஏன் இவரை கண்டு கட்சியினர் கதறுகின்றனர் என்று கட்சியின் சீனியர்கள் சிலரிடம் பேசினோம். தஞ்சை அம்மன் பேட்டையில் உள்ள ஆற்காட்டை சொந்த ஊராகக் கொண்டு அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்தவர். அந்த ஊரின் ஊராட்சி மன்ற துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். முன்னாள் தஞ்சை மாவட்ட பொறுப்பாளர் களிமேடு செல்வம் மூலமாக தஞ்சை அண்ணா அறிவாலயத்திற்கு வாட்ச்மேன் பதவிக்கு வந்தவர் வந்தவர் அவரைத் தொடர்ந்து தற்போது மாவட்ட செயலாளராக இருக்கும் துரை சந்திரசேகர் ஒன்றுபட்ட தஞ்சை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஆகிய மூன்று தொகுதிகளுக்கு மாவட்டச் செயலாளர் இருக்கும்போது இவர் அவருடன் உதவியாளர் போல் இருந்து கொண்டார். சரி என்று அவரும் இவரை தன்னுடன் எப்போதும் வைத்துக் கொண்டார். ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்தவர் போக போக தன்னுடைய அவதாரங்களை காட்ட ஆரம்பித்தார். மாவட்ட செயலாளர் இல்லாத போது அந்த இடத்தில் இவர் தன்னை மாவட்ட செயலாளராக நினைத்துக் கொண்டு தன்னுடைய மூவ்மெண்டுகளை மாற்ற ஆரம்பித்தார்.

எந்த ஒப்பந்தக்காரர்கள், கட்சிக்காரர்கள் கட்சியின் சீனியர்கள் என யார் வந்தாலும் யாரையும் மதிப்பது கிடையாது. யாரிடம் முகம் கொடுத்து கூட பேசுவது கிடையாது . மாவட்ட செயலாளர்கள் இருந்தால் அடக்க ஒடுக்கமாக இருப்பது அவர் சென்று விட்டால் இவரின் ஆட்டம் ஆரம்பித்து விடும் இவர் கட்சிக்காரர்களை மட்டுமல்ல தஞ்சை பகுதியின் ஒட்டுமொத்த ஒப்பந்தக்காரர்களையும் அடக்கி ஆள்வதும் இவர்தான். எந்த தஞ்சை பகுதியில் யார் எந்த காண்ட்ராக்ட் எடுத்தாலும் இவரை கேட்டு தான் எடுக்க வேண்டும் இவருக்கு வர வேண்டிய கட்டிங் தொகை வரவில்லை என்றால் எந்த ஒப்பந்தப் பணியும் யாருக்கும் முழுமையாக கிடைக்காது. இவர் வாயில் என்ன தொகை வருகிறது அதைத்தான் ஒப்பந்ததாரர்கள் கொடுக்க வேண்டும். இவர் பெயரிலும் லைசன்ஸ் எடுத்து வைத்து மாவட்டத்தில் பல பணிகளை பினாமி பேரில் நடத்தி வருகிறார் மேலும்மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி பெயரில் காண்ட்ராக்ட் எடுத்து மொத்த பணியையும் இவரே செய்து வருகிறார். பல காண்ட்ராக்ட் நபர்களுக்கு பினாமியாகவும் செயல்பட்டு வருகிறார்.காண்ட்ராக்டில் மட்டும் மாதந்தோறும் கமிஷனாக இவருக்கு பல லட்ச ரூபாய் வருகிறது . இவரால் அழிந்து போன காண்ட்ராக்ட்டர்கள் பலரும் இந்த தொழிலை விட்டு வேறு தொழிலுக்கே சென்று விட்டனர்.அறிவாலயத்திற்கு வரும்போது சொந்தமாக டூவீலர் கூட கிடையாதாம் ஆனால் இவரின் தற்போதைய சொத்து மதிப்பு மாவட்ட செயலாளரை தாண்டி இருக்கும் என்கின்றனர். சொகுசு பங்களா கார் என பல கோடிகளில் பவனி வருகிறார். ஒப்பந்தக்காரர்கள் தான் இப்படி கதறுகின்றனர் என்றால், கட்சிக்காரர்கள் இதைவிட ஒரு படி மேல், முன்னாள் அமைச்சர் பழனி மாணிக்கம் முன்னேற்பாட்டில் தான் இந்த கலைஞர் அறிவாலாய கட்டிடத்தை கட்டினோம் ஆனால் தற்போது கட்சியின் சீனியர்கள் யாருமே இங்கு வருவது கிடையாது காரணம் புண்ணியமூர்த்தி தான் வருபவர்களிடம் முகம் கொடுத்து கூட பேசுவது கிடையாது. யாரையும் மதிப்பது கிடையாது ஜாதி பார்த்து பழகுகிறார் இவருக்கு தேவைப்படுகிறவர்களை மட்டும் அலுவலகத்தில் வைத்துக் கொண்டு நான் சொல்வது தான் இங்கு நடக்கும் எனக்குத் தேவைப்படுபவர்கள் தான் இங்கு வர வேண்டும் என பலரையும் ஓரம் கட்டி விட்டார் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரும் அலுவலகத்திற்கு வருவதே கிடையாது முக்கியமான மீட்டிங் அமைச்சர்கள் வருகிறார்கள் என்றால் மட்டுமே கட்சியினர் வருகிறார்கள் மற்ற நேரங்களில் புண்ணியமூர்த்தி கையில் தான் கலைஞர் அறிவாலயம் என நொந்து போகின்றனர் கட்சியின் உடன்பிறப்புகள் இது மட்டும் இல்லை கட்சியில் பலருக்கும் கிளைச் செயலாளர், ஊராட்சி செயலாளர், வார்டு செயலாளர் என பதவிகள் மாவட்ட செயலாளரிடம் சொல்லி வாங்கித் தருகிறேன் என்று பல லட்ச ரூபாய் கமிஷனாகவும் வாங்கியுள்ளார்.ஆரம்ப காலத்தில் துரை.சந்திரசேகர் பேராவூரணி வரை மாவட்ட செயலாளராக இருக்கும்போது இவர் கட்சிப் பதவி, கூட்டுறவு சங்கங்களில் பதவி என மாவட்ட செயலாளருக்கு லிஸ்ட் வரும் போது அதனைப் பார்த்து முன்பே தெரிந்து கொண்டு அவர்களை அழைத்து உங்கள் பெயரை நான் தான் ரெகமெண்ட் செய்தேன் என பல பேரிடம் பல லட்ச ரூபாய் லஞ்சமாக வாங்கியுள்ளார். இதனை கட்சி தலைமைக்கு தெரியப்படுத்தவும் பலரும் தயாராகி வருகின்றனர். அதேபோல இவருக்கு டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை இறக்கும் வாகனம் அனைத்தும் இவருடைய கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அதற்கான டெண்டர் எடுத்து கேபிஎம் என்கிற பெயரில் இவரே நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமாக 20 30 வாகனங்கள் இருக்கும் எனவும் தகவல்கள் வெளி வருகிறது.தஞ்சை பட்டுக்கோட்டை, பேராவூரணி என பல பகுதிகளில் இவருடைய வாகனங்கள் தான் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை இறக்கிறதாம். இந்த கேபிஎம் டெண்டரை வைத்துக்கொண்டு மாதம் பல லட்ச ரூபாய் சம்பாதித்து இன்று தஞ்சை கோடீஸ்வரர்களில் இவரும் ஒருவராக வலம் வருகிறார். ஆனால் கேட்டால் என்னிடம் பெட்ரோல் போடுவதற்கு காசு இல்லை அதனால்தான் மின்சார பைக் வாங்கினேன் அதுவும் அறிவாலயத்தில் தான் சார்ஜ் போட்டுக் கொள்கிறேன் என்னிடம் டீ குடிக்க கூட காசு இல்லை என்று அடுத்தவர் பாக்கெட்டை பார்த்துக் கொள்கிறாராம் இந்த புண்ணியமூர்த்தி. இதே நிலை தொடர்ந்தால் புண்ணியமூர்த்தி மாவட்ட செயலாளரை மாற்றிவிட்டு அந்த இடத்தில் அமைதிப்படை அம்மாவாசையாக உட்காருவார் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது என்று அவருடைய கட்சிக்காரர்களே சொல்கிறார்கள்.கட்சி தலைமைக்கு தெரிந்தால் சரி பொறுத்திருந்து பார்ப்போம்என்ன நடக்கிறது என்று.?
செய்தி – வெற்றி