அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காட்சி தொடர்பியல் துறையோடு இணைந்து கணினி பயன்பாடு துறை, தகவல் தொழில்நுட்பத் துறை,தரவு அறிவியல் துறை சார்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது
அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காட்சி தொடர்பியல் துறை சார்பாக “The future scope of multimedia” என்னும் தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் 24.07.2025 அன்று போப் ஜான் பால் அரங்கில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு வருகை தந்த அனைவரையும் காட்சி தொடர்பியல் துறைத் தலைவர் பேராசிரியர் மாயா ஃபெரோஸ்கான் அவர்கள் வரவேற்றார். இந்த கருத்தரங்க நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் அருட்தந்தை முனைவர் ஜான் சக்கரியாஸ், கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர் கரோலின் மேரி மற்றும் கல்லூரியின் நிர்வாக அருட்தந்தை ஆரோன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக Image creative education நிறுவனத்தின் பேராசிரியர் திரு கார்த்திக் அவர்கள் “The future scope of multimedia” என்ற தலைப்பில் தெளிவாகவும் துல்லியமாகவும் மாணவர்களுக்குப் புரியும் வண்ணம் பல்வேறு உதாரணங்களுடன் விளக்கினார். இந்த கருத்தரங்கில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தார்கள். இந்நிகழ்ச்சியின் நிறைவாக காட்சி தொடர்பியல் துறை துறை உதவி பேராசிரியர்கள் செல்வி ஹெப்சிபா ப்ரிசிலா மற்றும் செல்வி சண்முகப்பிரியா அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள்.