தமிழகத்தில் கிங்டம் படம் திரையிடப்பட்டுள்ளது தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி வழக்கில் காவல்துறை, நாம் தமிழர் கட்சி பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இப்படத்தில் ஈழத்தமிழர்களை இழிவு படுத்தியதாக சர்ச்சை எழுந்ததால் நாம் தமிழர் கட்சி போராட்டத்தை அறிவித்தது.
இதை அடுத்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியது.
ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் கருத்துரிமை உண்டு எனக் கூறி, வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது…..
செய்தியாளர் ; ரூபன்ராஜ்