பெரம்பலூர் நகரில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் மாவட்டத் தலைவர் ஆர்விஜே.சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.
இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் கிரிஷ் சோடங்கர் கருத்து கூறியது போல, திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு அதிக தொகுதிகளும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும். அல்லது ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரும் கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர் மாவட்டத் தலைவர் சுரேஷ் ‘செய்தியாளர் சந்திப்பில் கூறியது:

காங்கிரஸ் கட்சி திமுகவின் அடிமை இல்லை. காங்கிரஸ் இல்லாமல் திமுகவால் தனித்து வெற்றி பெற முடியாது. வரும் தேர்தலில் காங்கிரஸுக்கு நாற்பது இடங்கள் குறையாமல் வழங்க வேண்டும்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும்.
துணை முதல்வர் பதவியும் வழங்க வேண்டும். எங்களுக்கு கேட்க உரிமை உண்டு. நாங்கள் கட்சி நடத்துகிறோம், மடம் நடத்தவில்லை. பெரம்பலூரில் ஆலோசனை கூட்டம் நடத்தி, டெல்லி தலைமைக்கு தீர்மான நகலை அனுப்பி வைத்துள்ளோம். கட்சி தலைமை நல்ல முடிவு எடுக்கும் மாநிலத் தலைவர்.செல்வப் பெருந்தகையை தவிர, மேலிட தலைவர்கள் யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை. என தெரிவித்தார்.
எம்.எஸ்.மதுக்குமார்.

