புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி காவல் நிலையத்தில் வரும் வர இருக்கின்ற விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தகுந்த வழிமுறைகளை பின்பற்றி நடத்த வேண்டும் என்ற ஆலோசனைக் கூட்டம் கறம்பக்குடி காவல் நிலையத்தில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு ஆலங்குடி டிஎஸ்பி மனோகர் தலைமை வகித்தார் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தாசில்தார் திருமதி ஜமுனா ஆகியோர் முன்னிலை வகுத்தனர் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கரம்பக்குடியில் நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கீழ்க்கண்ட வழிகாட்டுதலின்படி நடைபெற வேண்டும் என்றும் ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது அதன்படி சிலை தூய களிமண்ணால் தயாரிக்க வேண்டும் என்றும் அப்போது நடைமுறைப்படுத்தப்படும் வழிமுறைகளின் படி செயல்பட வேண்டும் என்றும்
தண்ணீரில் கரையக்கூடிய பொருளால் செய்யப்பட்டதாக சிலைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் முக்கியமாக பள்ளிவாசல் தர்கா
கிறிஸ்துவ ஆலய முதலிய பிற மதத்தினரின் சமயத்தலங்கள் அருகில் இல்லாதவாறு சிலைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் சிலைகள் நிறுவப்படும் இடங்கள் தீப்பிடிக்காத வண்ணம் அமைந்திருக்க வேண்டும் என்றும் போதுமான அளவு சிலைகள் உள்ள இடத்தில் வெளிச்சம் இருக்க வேண்டும் சிலைக்கு பாதுகாப்பு என பொறுப்பான ஒருவரை ஒவ்வொரு சிலைகளுக்கு நியமிக்க வேண்டும் மேலும் சிலையின் அருகில் சிலை அமைப்பாளர் பிரதிநிதி ஒருவரை சிலை கரைக்கப்படும் வரை பாதுகாப்பிற்கு வேண்டும் என்றும் பூஜை செய்ய வருபவர்களை பற்றி நன்கு

தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சிலைகளை அமைக்க வேண்டும் ஒவ்வொரு சிலைக்கும் பாதுகாப்பான ஒருவர் நியமிக்க வேண்டும் என்றும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்ட தேதியில் சிலைகளை வைப்பதுடன் குறிப்பிட்ட தேதி மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் மேற்படி சிலைகளை எடுத்து குறிப்பிட்ட இடத்தில் வைக்க வேண்டும் அனுமதிக்கப்பட்ட வழிகளில் தான் சிலைகளை எடுத்துக் கொண்டு ஊரணமாக கொண்டு செல்ல வேண்டும் என்றும் ஊர்வலத்தை நடத்த காலை ஒன்பது மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி வழங்கப்படும் என்றும் குறிப்பாக சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வண்ணம் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் காவல்துறையினர் அனுமதிக்காத இடங்களை பயன்படுத்த முயற்சி செய்யக் கூடாது கூம்பு வடிவத்தில் ஒலிபெருக்கியினை பயன்படுத்தக்கூடாது என்றும் என்பன போன்ற அறிவுரைகளை ஆலோசனைக் கூட்டத்தில் வழங்கினர் இக்கூட்டத்தில் கறம்பக்குடி காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் ரெகுநாதபுரம் எஸ் ஐ செல்வராஜ் கறம்பக்குடி தீயணைப்பு அலுவலர் சிறைசீலன் மற்றும் இந்து முன்னணியை சேர்ந்த மூத்த முன்னோடி ஆனந்தராஜ் இந்து முன்னணி மாவட்ட தலைவர் கருப்பையா நகர தலைவர் குழந்தை நகர செயலாளர் முருகேசன் மற்றும் காவல் துறையினர் பொதுமக்கள் இந்து முன்னணி சேர்ந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை பெற்றுக் கொண்டனர் அறிவுரைகளை வழங்கினார்
பட விளக்கம் கறம்பக்குடி காவல் நிலையத்தில் ஆலங்குடி டிஎஸ்பி மனோகர் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறுவது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.