தமிழக அரசியலில் தூய்மையான தலைவரான காமராஜர், கருணாநிதி முதல்-அமைச்சராவதற்கு உறுதுணையாக இருந்தார் என்று திருச்சி நாடார் உறவின்முறை சங்க விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.
திருச்சி நாடார் உறவின் முறை சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா, ரத்த தானம் வழங்கும் விழா மற்றும் குடும்பவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள எல்.ஆர்.ஆர். திருமண மண்படத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சங்க பொதுச்செயலா ளர் சண்முகதுரை நாடார் தலைமை தாங்கினார்.
பொருளாளர் பழக்கடை சரவணன் வரவேற்புரையாற்றினார் . தலைவர் இள வேந்தன் நாடார், இணை செயலாளர் வக்கீல் என்.சிவா முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரத்த தான முகாமை தொடங்கி வைத்தார். மேலும் பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம் உள்பட பரிசு பொருட்களையும் வழங்கி பேசினார்.

அவர் பேசுகையில், ‘நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழாவை ஆண்டு தோறும் சிறப்பாக நடத்தி வருவது பாராட்டுக்குரியது.
காமராஜர் தமிழக அரசியலில் தூய்மையான தலைவர். எல்லோராலும் மதிக்கப்படும் தலைவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர். கருணாநிதி முதல்-அமைச்சராவதற்கு காமராஜர் உறுதுணையாக இருந்தார். அதனால் எப்போதும் எங்களுக்கு அவர் மீது மரியாதை உண்டு’ என்றார்.

முன்னதாக பால பிரஜாபதி அடிகளார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். விழாவில் கல்வியாளர் ஜெய்லானி ‘கல்விக்கண் திறந்த காமராஜர்’ என்ற தலைப்பில் சிறப்புரை யாற்றினார்.
இந்த விழாவில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், தி.மு.க. பகுதி செயலாளர் மோகன்தாஸ் நாடார் ,ஓய்வு பெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பால் வண்ணநாதன், நாடார் உறவின்முறை சங்க நிர்வாகிகள் போஸ் செல்வகு மார், எஸ்.ஜே.மணி நாடார், திருமணி நாடார், அருண் பி அய்யனார், பேராசிரியர் மணி, சிந்தாமணி ரவி, அய்யனார், ஆறுமுகம், ஜெயக்கொடி, அருணாச்சலம், வி.ஏ.ஓ.கிருஷ்ணமூர்த்தி,பன் னீர்செல்வம், ஜெயபால், ஜெயமோகன், அரிசி கடை கண்ணன், பட்டு முருகன் ஆகியோர் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண் டனர்.