Sunday, February 1, 2026
No menu items!
Google search engine
HomeUncategorizedஅதிகாரிகள் அலட்சியத்தால் தொடர்ந்த கதண்டு கடி பொதுமக்கள் அவதி.

அதிகாரிகள் அலட்சியத்தால் தொடர்ந்த கதண்டு கடி பொதுமக்கள் அவதி.

அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுக்காவில் உள்ள நந்தியன் குடிக்காடு கிராம ரயில்வே கேட் அருகே அமைந்துள்ள புளிய மரத்தில் கதண்டு எனப்படும் விஷவண்டுகள் கூடுகட்டியுள்ளது. நேற்று 29.01.26 அன்று அந்த வழியாக சென்ற நந்தியன் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த விக்கி , ஆசைத்தம்பி பிரபு, இளங்கோவன், அவரது மனைவி ஆகியோர்களை கதண்டு துரத்தி கடித்ததில் பாதிப்படைந்தவர்கள். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இந்நிலையில் ராமச்சந்திரன் உள்ளிட்ட சிலரை இன்றும் (30.01.26) கதண்டு கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அவர்கள் செந்துறை அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்கள். இதில் அதிக பாதிப்படைந்த இராமச்சந்திரன் மேல்சிகிச்சைக்காக அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட துறையினர் நேற்றே முறையான தகவலை கொண்டு சேர்த்து கதண்டு அழிப்பிற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தால் இன்றும் பொதுமக்கள் பாதிக்கப்படிருக்கமாட்டார்கள். என மாத்தூர் சுற்றுவட்டாரத்தினர் கூறுகின்றனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து : தமிழ்ப் பேரரசு கட்சி திருச்சி மண்டல செயலாளர்
கு. முடிமன்னன் வைத்துள்ள கோரிக்கையில் பொதுமக்களை அச்சுறுத்தி, பாதிப்புக்குள்ளாக்கும் நந்தியன்குடிக்காடு ரயில்வேட் அருகேயுள்ள கதண்டு கூட்டினை அகற்ற மாவட்ட ஆட்சித் தலைவரும், செந்துறை தாசில்தார் வட்டார வளர்ச்சி அலுவலரும், தீயணைப்பு துறை அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

எம்.எஸ்.மதுக்குமார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments