கோச்சிங் சென்டர் காதல்… 2 ஆண்டு ஆசை வார்த்தை… உல்லாச வாழ்க்கை!- கைவிட்டதால் காதலன் வீட்டு முன் உயிரை மாய்த்த காதலி

0

திருமணம் செய்து கொள்வதாக கூறிய பலமுறை உல்லாசம் அனுபவித்துவிட்டு காதலன் கைவிட்டதால் வேதனை அடைந்த காதலி அவரது வீட்டு முன்பே உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இந்த சோக சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடந்துள்ளது.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே ஆணையம்பட்டி வடக்கு பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவருடைய மகள் அனிதா. 25 வயதான இவருக்கு 2016-ம் ஆண்டு கூலமேடு பகுதியை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்தது. இவர்களது திருமண பந்தம் ஒரு வருடம் கூட நீடிக்கவில்லை. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் விவாகரத்து பெற்றார் அனிதா. பெற்றோர் வீட்டில் இருந்த அனிதா, டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராவதற்காக கெங்கவல்லியில் உள்ள கோச்சிங் சென்டருக்கு படித்து வந்தார். அந்த கோச்சிங் சென்டருக்கு கெங்கவல்லி பேரூராட்சி மெயின் ரோட்டில் வசிக்கும் விக்னேஷ் (25) என்பவரும் வந்துள்ளார்.

அப்போது, இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நட்பாக பழகிய இருவரும் பின்னர் காதலர்களாக மாறினர். 2 ஆண்டுகளாக காதலில் சிறகடித்துப்பறந்துள்ளது இந்த ஜோடி. இந்த நிலையில், திருமணம் செய்வதாக அனிதாவிடம் ஆசைவார்த்தை சொல்லி வந்துள்ளார் விக்னேஷ். இதை நம்பிய அனிதா, விக்னேஷின் ஆசைக்கு இணங்கியுள்ளார். இதைப் பயன்படுத்திய பலமுறை அனிதாவுடன் உல்லாசமாக இருந்துள்ளார் விக்னேஷ். இதனிடையே, காதல் விவகாரம் இரண்டு பேரின் பெற்றோர்களுக்கு தெரியவந்துள்ளது. இந்த காதலுக்கு விக்னேஷ் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த எதிர்ப்புக்கு மத்தியிலும் இரண்டு பேரும் காதல் வானில் பறந்து வந்துள்ளனர். இதனிடையே, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி விக்னேஷிடம் அனிதா வற்புறுத்தி வந்துள்ளார். விக்னேஷோ திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கைவிரித்துவிட்டார். இதையடுத்து, கெங்கவல்லி காவல் நிலையத்தில் கடந்த 11ம் தேதி அனிதா புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் அனிதாவையும், விக்னேஷையும் காவல்துறையினர் அழைத்து விசாரணைக்கு வருமாறு அழைத்தனர். அனிதா நேற்று காலை கெங்கவல்லி காவல் நிலையத்துக்கு சென்றார். ஆனால், காதலன் விக்னேஷ் வரவில்லை.

இதையடுத்து, காதலன் வீட்டுக்கு சென்ற அனிதா, அங்கு தர்ணாவில் ஈடுபட்டார். இதனை வீட்டில் இருந்தவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் வேதனை அடைந்த அனிதா, தான் கொண்டு வந்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டார். இதனால் அவர் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள், அனிதாவை ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அனிதா உயிரிழந்தார். இந்த தற்கொலை குறித்து கெங்கவல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைமறைவாகிவிட்ட காதலனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். காவல்நிலையத்தில் இருந்து நேராக காதலன் வீட்டுக்கு அனிதா சென்றபோது ஒரு காவலர்கூட வரவில்லை. யாராவது வந்திருந்தால் தற்கொலை தடுத்திருந்திருக்கலாம் என்கின்றனர் அந்த பகுதி மக்கள்.

காதலித்து உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணம் செய்த மறுத்த காதலன் வீட்டு முன்பு காதலி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களை வேதனையடைய வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here