கடந்த மாதம் பட்டுக்கோட்டையைச் சார்ந்த சலீம் என்பவர் தஞ்சை கே.ஜி மருத்துவமனையில் கொரோனா நோய்க்காக அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட அவர் அவரின் உறவினர்கள் ஓப்புதலோடு கையெழுத்துடன் கொரோனா வார்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சலீம் பல்வேறு உடலில் ஏற்பட்ட பிரச்சனைகளால் மரணம் அடைந்துள்ளார் , மரணமடைந்ததை அடுத்து ஒரு மாதம் காலம்

அமைதியாக இருந்த சலீம் உறவினர்கள் மற்றும் தஞ்சை பர்மா பஜாரில் துணி வணிகம் செய்து வரும் ஓருவர், பட்டுக்கோட்டையில் இருக்கும் மத கட்சியைச் சார்ந்த ஒருவர், ஜாதி கட்சியைச் சேர்ந்த இன்னொருவர், மற்றும் தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள நடிகை பெயரில் ஆரம்பிக்கும் மருத்துவமனையை சார்ந்த. முக்கிய பிரமுகர் ஒருவர், என பலரும் சலீமின் மரணத்தை வைத்து பணம் பறிக்க வேண்டும் என்ற திட்டத்தை தீட்டி உள்ளனர்.

மருத்துவமனை மீது எந்த குற்றச்சாட்டும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் சலீம் கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை. அவருடைய உடல் உறுப்புக்கள் திருடப்பட்டுள்ளது. அதனை மருத்துவமனை உரிமையாளர் எடுத்து விற்று விட்டார் என்று பல்வேறு பிரச்சனைகளை கிளப்பி வந்தனர்

மேலும் சிலரோ பணத்தை அதிகமாக வாங்கி விட்டார். சரியாக மருத்துவம் பார்க்கவில்லை என்று பல நாட்கள் பல குற்றச்சாட்டுகளை பணத்திற்காக கிளப்பி விட்டனர்.. இந்நிலையில் கே.ஜி மருத்துவமனை நிர்வாகத்தினர் மாவட்ட ஆட்சித் தலைவரிடமும், காவல் துணை கண்காணிப்பாளரிடமும் அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் எங்கள் மருத்துவமனை புகழைச் சீர்குலைக்கும் வகையில் இருக்கிறது, ஆகையால் அந்த இறந்துபோன சலீம் என்பவரின் உடலைப் புதைத்த இடத்திலிருந்து தோண்டி எடுத்து மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் அந்த உடற்கூறாய்வு பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெருவில் அருகே நடந்தது. உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள் மருத்துவ கல்லூரி முதல்வரிடம் தற்போது அந்த முடிவைச் சமர்ப்பித்துள்ளனர். அந்த முடிவின்படி நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருது துரை நேற்றைய தினத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது ,
அந்த உடற்கூறு ஆய்வு பற்றிய பிரச்சினைகள் முடிந்து விட்டன. எதிர்த் தரப்பு சொன்ன புகார்கள் தவறானவை, அது போல் எதுவும் நடக்கவில்லை, அவர்கள் சொல்வது அனைத்தும் உண்மைக்கு மாறானவை. பரிசோதனையில்
மருத்துவமனை தரப்பினர் வெற்றி பெற்றுள்ளனர். இது போன்ற குற்றச்சாட்டுகள் மிகவும் தவறானது என்று அறிக்கையின் அடிப்படையில் தெரிவித்துள்ளார். இது பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் மருத்துவமனை தரப்பினர் வெற்றி பெற்று வந்துள்ளனர். என்று தெரிவித்துள்ளார்..

மேலும் மருத்துவமனை நிர்வாகத்தினர் நம்மிடம் பேசும் போது..
சிலர் சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் வேண்டுமென்றே தொடர்ச்சியாகப் பணம் பறிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும், வேறு மருத்துவமனையிடம் பணத்தை வாங்கிக்கொண்டு இதுபோன்ற செயல்படுகின்றனர், சம்பந்தமில்லாமல் சில பிரச்சினைகளைக் காரணம் காட்டி இது போல் பல குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர் என தங்கள் வருத்தங்களைத் தெரிவித்து வருகின்றனர். எங்கள் மருத்துவமனை நிர்வாகம் இது போன்ற பல பிரச்சனைகளில் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றுவிட்டோம். என்ன நடந்தாலும் நடக்கட்டும் நாங்கள் எதைப் பற்றியும் கவலைப்படப் போவதில்லை நாங்கள் நியாயத்தின் பக்கம், உண்மையின் பக்கம் இருக்கிறோம், மேலும் எங்களைச் செய்யாத தவறுகளுக்கு அசிங்கப்படுத்திய நபர்கள் மீது சட்டரீதியாகவும் வழக்குப் போடத் தயாராகி வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளனர் மருத்துவமனை வட்டாரத்தினர்..

பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று..??
செய்தி..ராம்..
