`பாத் ரூம் சென்ற மகள் சடலமாக கிடந்தார்; பதறிய பெற்றோர்!’- திருமணமான 45வது நாளில் நடந்த சோகம்

0

பாத்ரூம்புக்கு சென்ற இளம்பெண் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான 45வது நாளில் நடந்துள்ள இந்த சோக சம்பவம் உத்திரமேரூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் டவுன் பகுதியைச் சேர்ந்த பாலாஜி- ஜெயந்தி தம்பதியின் மூத்த மகள் செந்தாரகை (23). பாலாஜி, தீயணைப்பு துறை அலுவலகத்தில் வேலைப்பார்க்கிறார். ஜெயந்தி, சிபிஐஎம் கட்சியின் மாதர் சங்கத் தலைவியாக இருக்கிறார். செந்தாரகைக்கும் உத்திரமேரூர் நரசிம்மநகரைச் சேர்ந்த யுவராஜிக்கு கடந்த 24.5.2020-ல் திருமணம் நடந்தது. இல்லற வாழ்க்கையை இருவரும் சந்தோஷமாக தொடங்கினார். ஊரடங்கையொட்டி செந்தாரகை அம்மா வீட்டுக்கு வந்தார்.

8.7.2020-ம் தேதி சமையல் வேலைக்கு உதவி செய்துவிட்டு செந்தாரகை குளிக்கச்சென்றாள். குளியலறையிலிருந்து நீண்ட நேரமாகியும் அவள் வரவில்லை. அதனால் சந்தேகமடைந்த ஜெயந்தி, குளியலறையின் கதவை தட்டினார். அப்போதும் எந்தவித பதிலும் வரவில்லை. அதனால் குளியலறையில் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார். அப்போது குளியலறைக்குள் செந்தாரகை மயங்கி கிடப்பது தெரியவந்தது. அதனால் அதிர்ச்சியடைந்த ஜெயந்தி, பாலாஜி ஆகியோர் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு மூச்சு பேச்சு இல்லாமல் செந்தாரகை கிடந்தார். அவருக்கு ஜெயந்தியும் பாலாஜியும் முதலுதவி செய்தனர். ஆனால் செந்தாரகை கண்விழிக்கவில்லை.

இதையடுத்து செந்தாரகைக்கு இறுதி சடங்கு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. செந்தாரகை மரணம் குறித்த தகவல் உத்தரமேரூர் காவல் நிலையத்துக்கு தெரியவந்ததும் சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து விசாரித்தனர். பின்னர் செந்தாரகையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 174 (3) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில் “செந்தாரகை மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சிலர் கூறியுள்ளனர். அதனால்தான் அவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். இதுதொடர்பாக அவரின் குடும்பத்தினரிடமும் கணவரிடமும் விசாரித்துவருகிறோம். செந்தாரகையின் அம்மா ஜெயந்தி கொடுத்த புகாரில் என் மகளின் மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை. கணவர் குடும்பத்தினரும் என் மகளை துன்புறுத்தவும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்” என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here