GST..பில் தர முடியாது… முடிந்தால் பார்த்துக்கொள்… அரசு ஒப்பந்தக்காரரை மிரட்டிய தஞ்சை சிவா ஹார்டுவேர்ஸ்… நடவடிக்கை எடுப்பாரா ,GST துறையின் இணை ஆணையர்…

0

தஞ்சையில் உள்ள பிரபல ஹார்டுவேர்ஸ் கடைகளில் கரந்தை பகுதியில் இருக்கும் சிவா ஹார்டுவேர்ஸ் கடையும் ஓன்று. இங்குப் பல பொறியாளர்கள், ஒப்பந்தக்காரர்கள், தொழிலாளர்கள் எனப் பலரும் கட்டுமானப் பொருட்கள் வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தஞ்சையில் உள்ள அரசு ஒப்பந்தக்காரர் ஒருவர் கட்டுமானப் பணிகளைக் கட்டுவதற்கு பல லட்சத்திற்கு சிவா ஹார்டுவேர்ஸில் பொருட்களை வாங்கி உள்ளார் . வாங்கிய போது நிர்வாகத்தைச் சார்ந்தவர்கள் கையில் ஆன பில்களை போட்டுக் கொடுத்துள்ளார்கள், GST பில் பிறகு வாங்கி கொள்ளாலாம் என்றும் கூறியுள்ளனர். பிறகு கொரோனா காலம் வந்ததால் அப்படியே விட்டு விட்டாராம் அந்த ஒப்பந்தக்காரர். சில நாட்களுக்கு முன் ஒப்பந்தக்காரர் கடையில் சென்று எனக்கு மாநகராட்சியிடமிருந்து பணம் வர வேண்டியுள்ளது நீங்கள் ஜிஎஸ்டி பில் கொடுத்தால் அதனை வைத்து நானும் பணம் வாங்க முடியும் என்று கூறியுள்ளார் . அதற்கு சிவா நிறுவனத்தின் உரிமையாளர் சிவா நீங்கள் கேட்கும் போதெல்லாம் நாங்கள் பில் கொடுக்க முடியாது. நீங்கள் எங்கு வேண்டுமானாலும் போய் சொல்லுங்கள் என்னால் ஜி,எஸ்,டி பில் போட்டுத் தர முடியாது. அது எனக்கும் என் நிர்வாகத்திற்கும் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும் ,

நீங்கள் ஏன் இவ்வளவு காலம் பில் வாங்கவில்லை .நீங்கள் மாநகராட்சி கமிஷனரிடம் போய் சொல்லுங்கள் இல்லை ஜிஎஸ்டி அதிகாரிகளிடம் போய் சொல்லுங்கள் எங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. எங்களுக்குப் பின்னாள் பல சக்திகள் இருக்கிறது என்று அந்த ஒப்பந்தக்காரரை மிரட்டியுள்ளார் உரிமையாளர் சிவா, அந்த ஒப்பந்தக்காரர் தற்போது இவர்கள் மீது திருச்சி சுங்கம் கலால் மற்றும் ஜிஎஸ்டி இணை ஆணையரிடம் புகார் அளித்து இருக்கிறார், அவர் புகார் அளிக்கும் பட்சத்தில் சட்டப்படி அந்த சிவா ஹார்டுவேர்ஸ் கடையும் அதன் உரிமையாளரும் பாதிக்கப்படுவார்கள் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை இருக்கும் என்கின்றனர் அதிகாரிகள்

GST.. அலுவலகம்

மேலும் சில காலமாகச் சிவா ஹார்டுவேர்ஸ் நிறுவனத்தினர் எந்த வாடிக்கையாளரையும், ஒப்பந்தக்காரர்களையும் சரியாக மதிப்பது கிடையாதாம். தரமான பொருட்களை விற்பதும் கிடையாதாம், இரண்டாம் தர பொருட்களை இவர்கள் அதிகமாக விற்பதால் அதனைக் கொண்டு கட்டுமானப்பணிகள் கட்டும் போது நிறைய இடங்களில் மக்களுக்கும், அரசுக்கும், நிறைய இழப்பு ஏற்பட்டதாகவும் பொதுமக்கள் பேசிக்கொள்கிறார்கள், பணம் அதிகமாகிவிட்டது என்பதால் எதையும் சாதித்துக் கொள்ளலாம் தஞ்சையில் நம்மை யாரும் அசைக்க முடியாது என்ற எண்ணத்தில் வலம் வருகின்றாராம் சிவா ஹார்டுவேர்ஸ் நிறுவனத்தினர்

உரிமையாளர் ..சிவா

அரசுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் GST பில் கேட்பவர்களை இதுபோல் துரத்திவிடும் வணிக நிறுவனங்களை இந்த அரசு என்ன செய்யப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்…

இது சம்பந்தமாக சுங்கம் கலால் மற்றும் GST துறையின் இணை ஆணையர் சரோஜினி அவர்களிடம் பேசினோம்.. இது சம்பந்தமான புகார்கள் எனக்கும் வந்துள்ளது அதனை ஏற்றுக்கொண்டு எங்கள் டீமில் விசாரிக்க ஏற்பாடு செய்திருக்கிறோம், தவறு செய்து இருக்கும் பட்சத்தில் அந்த கடை மீது நடவடிக்கை கண்டிப்பாக இருக்கும் என்றார்…

கையில் போடப்பட்ட பில்

சிவா ஹார்டுவேர்ஸ் உரிமையாளர் சிவாவிடம் பேசினோம் அந்த நீங்கள் சொல்லும் காண்ட்ராக்டர் கடந்த வருடம் பொருட்கள் வாங்கியதாக என்னிடம் கொண்டு வந்து கொட்டேஷன் பில்களை நீட்டினார் .நான் கடந்த வருடம் வாங்கியதற்கு நான் இப்பொழுது கொடுக்க முடியாது என்று சொன்னது உண்மைதான் அவர்கள் பில்களை அப்போதே வாங்கி இருக்க வேண்டும் இப்பொழுது கேட்டால் நாங்கள் எப்படி அவரை அடையாளப்படுத்தி பில் கொடுக்க முடியும், நாங்கள் முறையாக GST பில்களை கட்டி வருகிறோம் இது அரசுக்கு தெரியும். நாங்கள் அவரை மிரட்டவில்லை அவர்தான் எங்களை மிரட்டினார் என்று கூறினார் உரிமையாளர் சிவா..

குறிப்பு… சுங்கம் கலால் மற்றும் ஜிஎஸ்டி பிரிவைப் பற்றி இணையதளத்தில் தேடும்போது… சுங்கம் கலால் மற்றும் GSTவெப்சைட் important links. ஜிஎஸ்டி கவுன்சிலைத் தவிர மற்ற லிங்க் எதுவும் செயல்படாமல் முடங்கி உள்ளது. இவ்வாறு இருக்க இணை ஆணையர் சரோஜினி எப்படி நடவடிக்கை எடுப்பார், என்ற கேள்விக்குறி எழுகிறது. அவரின் மேற்பார்வையில் இருக்கும் இணையதள பிரிவுகளே முடங்கிக் கிடக்கும் போது அவரின் துறையும் முடங்கி தான் கிடக்கும் என்று பொது மக்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here