மயிலாடுதுறையில் இருந்து மதுரை மற்றும் சென்னை போன்ற நகரங்களுக்கு புதிய வழித்தட பேருந்துகள் மாண்புமிகு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு பேருந்து கழகம் (கும்பகோணம் )நாகை மண்டலத்தில் இருந்து பிஎஸ்4 மற்றும் புதிய கூண்டு அமைக்கப்பட்ட புதிய பேருந்துகள் 6 புதிய வழிதடப் பகுதியில் இயக்க துவக்க விழா நடைபெற்றது.
இதனை அமைச்சர் திரு. மெய்யநாதன் அவர்கள் துவங்கி வைத்தார்.இந்த ஆறு பேருந்துகளில் 3 புதிய பேருந்து 3 ஏற்கனவே உள்ள பேருந்துகளாகவும் இருந்தன.
இந்த விழாவை தொடங்கி வைத்த திரு.மெய்யநாதன் அவர்கள் மேலும் ஊனமுற்றோருக்கான நலத்திட்டத்தையும் அளித்தார். இவ்விழாவில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ். ஏ.ராஜ்குமார் அவர்களும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் திரு. நிவேதா.M. முருகன் அவர்களும் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களும் மற்றும் நகர மயிலாடுதுறை நகரத் தலைவர் திரு குண்டாமணி (எ) செல்வராஜ் அவர்களும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் -பிரவீன்குமார்