தமிழகத்தில் நாளை 12 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 2024 கல்வி ஆண்டில் 4.13 லட்சம் மாணவர்களும், 3.38 லட்சம் மாணவிகளும், ஒரு திருநங்கையும் 12 வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர்.
தமிழகத்தில் நாளை 6 5 2024 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அறிக்கையின்படி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர விரும்பு மாணவர்கள் நாளை திங்கட்கிழமை 6/5/2024 இணையதள விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.
கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க மாணவர்கள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்துவதற்கு கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு, UPI ஆகியவற்றை பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இல்லையென்றால் அருகில் உள்ள தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மையங்களில் காசோலின் மூலமும் கல்லூரிகளில் விண்ணப்பிக்கலாம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க விரும்ப மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின் மூலம் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
அ.காவியன்
செய்தியாளர்