HomeUncategorizedமாணவர்களுக்கான கலைத் திருவிழா

மாணவர்களுக்கான கலைத் திருவிழா

நாகப்பட்டினம் அக்டோபர் 14

1 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் 2026-27
நாகப்பட்டினம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றது.
இளையோர் திறன் என்ற தலைப்பில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி மாணவ-மாணவியர்களுக்கான போட்டிகள் 14.10.2026 அன்று நடைபெற்றது.
போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.நா.ரவிச்சந்திரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
ஒப்புவித்தல், இசை, ஓவியப்போட்டி, நடனம், நாடகம், பலகுரல், பேச்சுப்போட்டி உள்ளிட்ட 42 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 859 மாணவ – மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் மையப்பொறுப்பாளர்களாக பிரதாபராமபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி. எம்.சாந்தி, முட்டம், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி. எஸ்.சாந்தி, திருமருகல், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி. எஸ்.கே. அமுதா, நரிமணம், அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் (பொ) ஆர்.சுரேந்திரன், வட்டாரக்கல்வி அலுவலர்கள், வி.சிவக்குமார், வி.சுப்ரமணியன், வி.ஜெயந்தி, ஆர்.அன்பழகன், எஸ்.கண்ணன், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், நகராட்சி நடுநிலைப்பள்ளி நெல்லுக்கடைத்தெரு பள்ளித்தலைமையாசிரியர் திரு.ஐ.சகாய ஜோசப்ராஜ், பள்ளித்தலைமையாசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், கணக்காளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் முனைவர் மு.ஞானசேகர் வரவேற்றார். முடிவில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி.சண்முகக்கனி நன்றி கூறினார்.

செய்தியாளர்
ஜி.பி.மார்க்ஸ்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments