தமிழர் தேசம் கட்சித் தலைவர் கே கே செல்வகுமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியில் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு சிறுமி காட்டும் பிராண்டிகளால் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்துகளுக்கு ஆளாகப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு இருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
ஒன்பது வயதை கூட எட்டிறாத அந்த சிறுமியின் உடல் கயவர்களால் சிதைக்கப்பட்டு கால்வாயில் கண்டெடுக்கப்பட்டு இருப்பது மனதை உலுக்குகிறது.
அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையின் கூடாரமாக புறச்சூழல் மாறி இருப்பதும் குற்ற விசாரணை நடைமுறைகள் தொடர்ந்து அரசியல் அழுத்தங்களால் பலவீனமாகி பாதிக்கப்பட்டிருப்பதும் பள்ளிக்கூடங்களில் துவங்கி கட்டுப்பாடுகளின் மீதான தளர்வுகள் இப்படி யானவன் செயல்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது வேதனை அளிக்கிறது.
மகளை இழந்து வாடும் பெற்றோர்களுக்கான நீதியை புதுச்சேரி அரசு வழங்கிட வேண்டும் இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இனி மேலும் அதிகரிக்காத படி இருக்க கொலையாளிகளின் அனைவர் மீதான விசாரணை விரைந்து முடித்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும் இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்….
செய்தியாளர்; ரூபன்ராஜ்