திருச்சி மாநகராட்சியில்
ரூ 3.78 கோடி சூப்பர் சக்கர் வாகனத்தை
அமைச்சர் கே.என்.நேரு இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் ரூபாய் 3.78 கோடி மதிப்பீட்டில்
கழிவுநீர் மேலாண்மை
மறுசுழற்சி வசதியுடன் கூடிய சூப்பர் சக்கர் வாகனத்தை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் 15வது மத்திய நிதிக்குழு பரிந்துரை நிதி ரூபாய் .378.00 இலட்சம் மதிப்பீட்டில் 2024-25ம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை தலைப்பு நிதியின் கீழ் வாகனம் வாங்கப்பட்டுள்ளது.
புதைவடிகால் அதிக ஆழமுள்ள ஆள் இறங்கு குழிகளில் ஏற்படும் அடைப்புகளை உடனடியாக நீக்குவதற்கு மறுசுழற்சி வசதியுடன் கூடிய அதிநவீன சூப்பர் சக்கர் கம் ஜெட்டிங் வாகனம் 13,000 லிட்டர் தொட்டி கொள்ளளவு கொண்டது.

இவ்வாகனம் அதிக உறிஞ்சும் திறன் மற்றும் அடைப்பு நீக்கும் திறன் கொண்ட அதி நவீன வகை கனரக வாகனமாகும்.
பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்த இயந்திரம் புதை வடிகாலில் உள்ள குப்பை மற்றும் மண்,கல் போன்ற அனைத் துக் கழிவுகளையும் மொத்தமாக உறிஞ்சி எடுத்து, பின்னர் குப்பை மற்றும் மண் கழிவுகளை மட் டும் தனியாக சேகரித்து வைத்துக் கொண்டு, தண்ணீரை மட்டும் புதை சாக்கடையில் வடிகாலில் விட்டுவிடும்.
இவ்வாறு செய்வதன் மூலம்
புதை சாக்கடைகளில் அடைப்புகள் இல்லாமல் கழிவுநீர் எளிதாக செல்லும்.
இவ்வாகனம் மூலம் மாநகர பகுதிகளில் உள்ள புதைவடிகால் மேன்ஹோல் மிகவும் எளிதாகவும் குழிகளில் ஏற்படும் அடைப்புகளை உடனுக்குடனும் நீக்க இயலும். மேலும் உச்சநீதி மன்றத்தின் உத்திரவின்படி இப்பணியில் மேன்ஹோல் குழிகளில் மனித ஆற்றல்களின் ஈடுபாடு முற்றிலும் தவிர்க்கப்பட்டும், தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிநேரம் குறைக்கப்பட்டும் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றியும் மாநகராட்சி பகுதிவாழ் பொதுமக்களுக்கு பாதுகாப்பான சுற்றுச்சூழலும் ஏற்படுகிறது.
மேற்கண்ட வாகனம் மூலமாக மேற்கொள்ளப்படும் பணியானது திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் கழிவுநீர் மேலாண்மை பணியில் ஒரு மைல் கல் ஆகும்.
இந் நிகழ்வில் நகராட்சி நிர்வாகத் துறை இயக்குனர் மதுசூதன் ரெட்டி , மாவட்ட ஆட்சித் தலைவர் வே. சரவணன் , மேயர் மு.அன்பழகன் , மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன் மண்டலத் தலைவர்கள் துர்காதேவி விஜயலட்சுமி கண்ணன் , நகரப் பொறியாளர சிவபாதம், செயற் பொறியாளர் பால சுப்பிரமணியன்,, செயற்குழு உறுப்பினர் கவுன்சிலர் காஜாமலை விஜய், பொதுக்குழு உறுப்பினர் கிராப்பட்டி செல்வம், மாவட்ட துணை செயலாளர் கவுன்சிலர் முத்துச்செல்வம், கவுன்சிலர்கள் மண்டி சேகர்,விஜயா ஜெயராஜ், கமால் முஸ்தபா, புஷ்பராஜ், செல்வி, சுபா, , மனிதநேய மக்கள் கட்சி கவுன்சிலர் பைஸ் அஹமது, விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் பிரபாகரன், ம.தி.மு.க.அப்பீஸ் முத்துக்குமார், சி.பி.ஐ.சுரேஷ்குமார், சுரேஷ்,மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

