இந்த கூட்டத்தில் திருச்சி மாநகர மாவட்ட தலைவர் ரத்தினகிரி வரவேற்புரையாற்றினார். அகில இந்திய குயவர் உரிமை கட்சி மாநில தலைவர் சாலை செல்வமணி தலைமை தாங்கினார். தேசியத் தலைவர் சாலை சாதியன், சமூக நீதிப் பேரவை தலைவர் ரவிக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினார். மாநில வழக்கறிஞர் அணி தலைவர் ராஜ்மோகன் நன்றிரை கூறினார். கூட்டத்தில் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் சௌந்தரராஜன், ராதா, குருசாமி, சுப்புராஜ், சுரேஷ், ராஜசேகர், முருகதாஸ், சென்பகமூர்த்தி, அர்ஜுனன், கௌரி, முருகேசன், வனராஜா, பிரியா, சதீஷ்குமார், பொன்னர், கண்ணன், ராஜ்குமார், சாலை செல்வமுத்து, ஆனந்தம், நரேஷ், மணி, ராஜலட்சுமி, பானுமதி, சாலை அலங்காரம், சந்தோஷ் குமார், துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர், கூட்டத்தின் மாநகர மாவட்ட துணைத் தலைவர் மணிகண்டன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, வருகிற பிப்ரவரி 8 மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது, குயவர் சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மண் எடுக்கும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் அரசு வேலைவாய்ப்பு கல்வியில் 7.5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் போன்ற 11 கோரிக்கைகள் தீர்மானம் ஆக நிறைவேற்றப்பட்டது. கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிகளுடன் இணைந்து தேர்தல் சந்திப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

