Monday, December 22, 2025
No menu items!
Google search engine

21.12.2025. திருச்சி தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழக அலுவலகத்தில்
தெற்கு மாவட்ட தி.மு.கழக செயற்குழு கூட்டம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடந்தது.

திருச்சி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் வி.என். நகர், திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில்” மாவட்ட அவைத்தலைவர் என்.கோவிந்தராஜன் தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது
கழக தலைவர் தமிழ்நாடு முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பணிகள் குறித்து . 19/12/2025 அன்று வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியல் மாதிரியை வைத்து BLA-2 அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பெயர் சேர்த்தல், நீக்கல் சம்பந்தமான தீவிரப் பணிகளை ஈடுபடுத்தல்.
மற்றும் கழக ஆக்க பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

நிறைவாக கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம்

  1. பீகாரில் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்து தமிழ்நாடு, மேற்கு வங்காளம் என ஆவணமாக பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் கூற்றை பொய்யாக்கி தமிழ்நாட்டில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியயை தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைய பாடுபடுவோம் என
    தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
  2. திருவெறும்பூர் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையும் அடிப்படைத் தேவையும் ஆன திருவெறும்பூர் பேருந்து நிலையம் ஒப்புதல் வழங்கியும், மணப்பாறை தொகுதியில், கலைஞர் விளையாட்டு அரகங்கம் அமைந்திட நிதி ஒதுக்கீடு செய்து அடிக்கல் நாட்டிய “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” அவர்கள் துணை முதலமைச்சர் “உதயநிதி ஸ்டாலின் ” அவர்களுக்கும், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களுக்கு கூட்டம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது.
  3. தமிழகத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைவதற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் தீர்மானத்தை கையெழுத்திடாமலும் காலம் தாழ்த்தி வரும் ஒன்றிய அரசின் கைக்கூலியாக செயல்படும் ஆர்.எஸ்.எஸ்.கவர்னர் ஆர்.என்.ரவியை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கின்றது.
  4. ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து தனி ஒரு ஆளாக போராடி ஒன்றிய அரசிற்கு கல்வி கொள்கையில் உள்ள குறைகளை அனைத்தையும் தமிழ்நாட்டு மக்கள் தெரிந்து கொள்ளும் விதமாக மதயானை என்னும் புத்தகத்தை எழுதியது மட்டுமல்லாமல் ஒரு மாநில அமைச்சராக இருந்து கொண்டே இந்தியாவிலே முதல்முறையாக இந்த வேலை பளுவிற்கு நடுவிலும் முனைவர் பட்டமும் பெற்று நமக்கெல்லாம் பெருமை சேர்த்தமைக்கு இது அனைத்தையும் முதலமைச்சர் வாயாலையும் பாராட்டும் பெற்றமைக்கும் இக்கூட்டம் நமது மாவட்ட கழக செயலாளரும் -அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை வாழ்த்தியும் பாராட்டியும் ஒருமனதாக தீர்மான நிறைவேற்ற படுகின்றது.

5.தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பெயரில் செயல்பட்டு வந்த 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றியும் கொண்டுவந்த ஒன்றிய பா.ஜ.க. அரசையும் இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கின்றது. இத்திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை ஒத்து ஊதும் அ.தி.மு.க வையும் இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

இக்கூட்டத்தில் மாநகரக் கழகச் செயலாளர்
மு மதிவாணன் தலைமை செயற்குழு உறுப்பினர் வன்னைஅரங்கநாதன், சேகரன், சபியுல்லா தொகுதி பார்வையாளர்கள் மணிராஜ், கதிரவன், பகுதி கழகச் செயலாளர் மோகன் மற்றும் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட – மாநகர அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி சேர்மன்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Previous article
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments