திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான யோகாசன போட்டி பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் தங்களது உடல்நலத்தை பேணிகாக்கவும், முதாதையர்கள் உடல்நலபாதுகாப்பில் ஆயுளையும், உடல், உள்ளம் மற்றும் மனநலத்தைப் பாதுகாக்கும் யோகாவை அனைவரும் கற்கச் செய்யும் நோக்கில் தமிழ்நாடு தொழில்முறை தகுதி பதிவுபெற்ற யோகா ஆசிரியர்கள் நலச்சங்கம் மற்றும் திருச்சி கண்வர்ஸ் யோகா ஸ்டுடியோ இணைந்து நடத்தும் பள்ளி, கல்லூரிகளுக்கு இடையேயான முதலாவது மாவட்ட அளவிலான யோகாசன போட்டி இ.ஆர் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை தொடங்கி நடைபெற்றது.
ஓபன் பிரிவில் ஆடவர் மற்றும் மகளிர்க்கு என தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டுவருகிறது, இதில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 600க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
மேலும் திருச்சி புத்தூர் பகுதியில் இயங்கிவரும் பார்வைத்திறன் குறைபாடுடைய மகளிருக்கான பள்ளியை சார்ந்த மாணவிகள் கலந்துகொண்டு பல்வாறு யோகாசனம் செய்து அசத்தினர்

இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் சக்ராசனா, உத்ராசனா, வீரபத்ராசனா, சர்வஉத்ராசனா, விருக்ஷாசனா, புஜங்காசனா உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை செய்துகாட்டி அசத்தினர். வயது அடிப்படையிலான போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசு கோப்பைகளும் வழங்கப்பட்டது.

