Tuesday, December 2, 2025
No menu items!
Google search engine
HomeUncategorizedதிருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர்காதர்மொய்தீன்.பேட்டி .

திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர்காதர்மொய்தீன்.பேட்டி .

பீகார் தேர்தல் ஓட்டுக்கு ரூ.10,000 கொடுத்த தேர்தல். பீகார் நிலை வேறு தமிழ்நாட்டின் நிலை வேறு. இங்கு மீண்டும் திமுக தான் ஆட்சி அமைக்கும் – காதர் மொய்தீன் பேட்டி

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. அக்கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் தலைமையில நடந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காதர் மொய்தீன்,

2026 சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் நல்லாட்சி தொடரும். அதற்கான தேர்தல் பணிகளை நாங்கள் இன்று முதல் தொடங்குகிறோம்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் ஜனவரி 28 ஆம் தேதி சுவாமி மலை அருகே மஹல்லா ஜமாத்துக்கள் மாநாடு நடைபெற உள்ளது. அதில் 8000 க்கும் மேற்பட்ட மஹல்லா ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் பங்கேற்கிறார்.

எஸ்.ஐ.ஆர் தொடர்பாக எங்கள் கட்சி சார்பிலும் உச்ச நீதிமன்றம் கேரள் உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளோம்.

பீகாரில் வாக்காளர்கள் 65 லட்சம் நீக்கப்பட்டுள்ளார்கள். அது போன்ற பிரச்சனை வர கூடாது என்பதால் தான் நீதிமன்றம் வரை சென்றுள்ளோம். எஸ்.ஐ.ஆர் குறித்து மக்களுக்கு பல்வேறு குழப்பங்கள் உள்ளது எனவே அதை ஒத்தி வைத்து விட்டு தேர்தலுக்கு பின்பு அதை நடத்த வேண்டும்

20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் முஸ்லீம் சிறைவாசிகள் விடுவிக்கப்பட வேண்டும்.அதற்கு முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அதை முதல்வர் செய்வார் என நம்புகிறோம்.

பட்டா இல்லாத பள்ளிவாசல்கள், மதரஸாக்கள், அடக்கஸ்தலங்களுக்கு அபர்ஸ்தானுகளுக்கு பட்டா வழங்க வேண்டும்.
இந்த கூட்டத்தில் 16 தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளோம். அது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.

கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் எங்களுக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் நாங்கள் தோல்வி அடைந்தோம். அதே நிலை வரும் தேர்தலில் நிச்சயம் ஏற்படாது.

2026 தேர்தலில் 5 தொகுதியிலாவது போட்டியிட வேண்டும் என்கிற விருப்பம் எங்களுக்கு உள்ளது. முஸ்லீம் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு 16 தொகுதிகளில் போட்டியிட கலைஞர் ஆட்சி காலத்தில் வாய்ப்பு வழங்க ப்பட்டது வரும் தேர்தலிலும் அதை வலியுறுத்துவோம்.

பீகார் தேர்தல் ஓட்டுக்கு 10,000 கொடுத்த தேர்தல். பீகாரின் நிலைமை பீகாருக்கு உள்ளது தமிழ்நாட்டின் நிலைமை தமிழ்நாட்டிட்கு உள்ளது. இரண்டு மாநில நிலைமையும் வேறு. தமிழ்நாட்டில மீண்டும் திமுக ஆட்சி தான் அமையும்.

திமுக ஆட்சி என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆட்சியாக உள்ளது.

கலைஞர் திமுகவிற்கு மட்டும் தலைவர் அல்ல ஒட்டுமொத்த சமுதாய மக்களுக்கும் தலைவர் என ராமதாஸ் ஒருமுறை கூறினார். அவர் வழியில் செயல்படும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆட்சியும் அனைத்து சமுதாய மக்களுக்கும் பிரதிநிதித்துவம் தரக்கூடிய ஆட்சியாக நிச்சயம் இருக்கும் என்றார்.

அந்த கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் வெளிநாடு வாழ் தமிழர்களையும் இணைக்க வேண்டும், தமிழறிஞர்கள் நூல்களை அரசுடமையாக்க வேண்டும், காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments