புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே மங்கனுார் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராமத்தில் உள்ள 50கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கந்தர்வக்கோட்டை, தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கல்வி பயின்று வருகின்றனர். இந்த மாணவர்கள் பள்ளி வேலை முடிந்து மாலை நேரத்தில் பேருந்து சேவை இல்லாததால் மங்கனூர் ஆர்சிலிருந்து மங்கனூர் கிராமத்திற்கு 4 கிலோமீட்டர் தைலமர காட்டின் வழியே நடந்தே செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளி மாணவிகள் மதுப் பிரியர்களால் பாலியல் சீன்டல்கலுக்கு உள்ளளாகி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை வைத்தும் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி

உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மாலை பள்ளி வேலை முடிந்து மாலை 6.30 மணியளவில் மங்கனூர் ஆர்சிலிருந்து மங்கனூர் கிராமத்திற்கு செல்ல பேருந்து சேவை அமைத்து தரக்கோரி பள்ளி மாணவர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர். பழனிவேல்….

