திருச்சியில் 2026ல் சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு ஒட்டு? நெட்வொர்க்கர்ஸ் வெல்பேர் அயோசியேஷன் பத்திரிக்கை யாளர் சந்திபில் கேள்வி? ‘,தமிழகத்தில் மோசடியான தனியார் போலி நிறுவனங்கால் ஏமாற்றப்பட்ட மக்களுக்கு தாங்கள் ஏமாந்த பணத்தை திரும்ப பெற்றுத்தரவும், போலி நிதி மற்றும் நிறுவனங்களை ஒழிக்கவும் , நியாயமாக தொழில் செய்யும் தொழிலுக்கு பாதுகாப்பு ஏற்படும் வகையிலும், ஓய்வு பெற்ற நீதி அரசன் தலைமையில் ஆணையம் அமைத்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதி கூறி தேர்தல் அறிக்கையில் வெளியிடும் கட்சிக்கு அசோசியன் ஆதரவு அளிக்கும் என்றும், ‘ நேரடியாக விற்பனை என்கிற நமது தொழிலுக்கு கேரளா அரசு அங்கீகாரமும் பாதுகாப்பும் வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது . கேரளா அரசு இயற்றிய சட்டத்தைப் போல தமிழகத்திலும் சட்டத்தை இயற்றவும் என்று கூறுகிற அரசியல் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்றும் , நேரடி விற்பனை என்கிற எம்எல்எம் இண்டஸ்ட்ரியை அங்கீகரிக்கவும் தனி சட்டம் இயற்றவும் தனி அமைச்சகம் ஏற்படுத்தவும் தனி வாரியம் அமைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கவும் சட்ட பாதுகாப்பு வழங்கவும் தொடர்ந்து மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள் . மத்திய மாநில அரசுகளின் அனைத்து அங்கீகாரங்களையும் பெற்று , டி டி எஸ் ஜி எஸ் டி . போன்ற வரிகளை செலுத்தி வருகிற நேரடி விற்பனை என்கிற எம் எல் எம் தொழில் செய்து வருகிற நிறுவனங்கள் மூலம் இந்தியா முழுவதும் சுமார் 5 கோடி பேர் முழு நேர வேலை யாகவும், 12 கோடி பேர் பகுதி நேரமும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளார்கள் . பல லட்சம் இளைஞர்கள் முகவர்கலாக பணியாற்றியும் வருகிறார்கள் ,. நேரடி விற்பனை என்கிற எம் எல் எம் தொழிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் போலீ இணையதளங்களையும் ‘ போலி செயலிகளையும், தொடங்கி உள்ள போலி நிதி நிறுவனங்களை நம்பி பல கோடி மக்கள் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள் . இதனால் நேர்மையான கம்பெனிகளுக்கு அவப்பயரும் ஏற்பட்டுள்ளதாகவும் , போலி நிதி நிறுவனங்களிடம் ஏமாந்த மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையிலும் , இனியும் மக்கள் ஏமாறாமல் இருப்பதற்காகவும் 16 ஆண்டுகளாக செய்தித்தாள்கள் மூலமும் தொலைக்காட்சி செய்திகள் மூலமும் லட்சக்கணக்கில் நோட்டீஸ்கள் அச்சடித்து விநியோகித்தும் ஆர்ப்பாட்டங்கள் உண்ணாவிரதங்கள் போன்ற போராட்டங்கள் மூலமாகவும் விழிப்புணர் வு ஏற்படுத்தியும் , மத்திய மாநில அரசுகளுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் அணுக்கள் கொடுத்தும் தொடர்ந்து சேவை நோக்கத்தோடு போராடி வருவதாகவும் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்கள் . மேற்கண்ட கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கு அவர்களது வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அழித்து வெற்றி பெற செய்வோம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையாக முதன் முறையாக கோவையில் தலைவர் மற்றும் நிறுவனர் திரு மனோகரன் தலைமையில் துணைத் தலைவர்கள் திரு தமிழ்ச்செல்வம் மற்றும் திரு ரூபன் முன்னிலையில் முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 38 மாவட்ட தலைநகரங்களில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது . 28 10 2025 அன்று காரைக்காலில் துணைத் தலைவர் தமிழ்செல்வம் தலைமையில் மேல்மட்ட குழு உறுப்பினர்கள் பாலமுருகன் பழனி வாசுதேவன் கிருபாகரன் மாறன் வெங்கடேசன் ரமேஷ் கவிதா செந்தில்குமார் அந்தி களியமூர்த்தி அவர்கள் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது . திருச்சியில் வருகிற சனிக்கிழமை 8 11 2025 அன்று நடைபெற உள்ள மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தலைவர் மனோகரன் மற்றும் நிறுவனர் அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளதாக கூறினார்கள் . வரவேற்புரை ஏமாற்ற குழு உறுப்பினர் சேகர் தலைமை துணைத் தலைவர் பிரபாகரன் முன்னிலை துணைத்தலைவர்கள் தமிழ்ச்செல்வம் ரூபன் ராமச்சந்திரன் பாலமுருகன் விக்டோரியா மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் 30 உடன் மூன்று அம்ச கோரிக்கை குறித்து மாநாட்டில் விளக்கவுரை ஆற்று உள்ளார்கள் என்பதாகவும் திரு வாசுதேவன் கிருபாகரன் கோவை மனோகரன் ஆகியோர் நிறைவாக நன்றியுரைகூறி உயர்மட்ட குழு உறுப்பினர் செல்வகுமார் அவர்கள் நன்றி. தெரிவித்தார் . மேற்கண்ட கூட்டம் நெட்வொர்க்கர்ஸ் வெல்ஃபேர் அசோசியன் தலைவர் திரு மனோகரன் தலைமையில் நடைபெற்றது .

