அரியலூர் மாவட்டம் அரியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெருஞ்சிக்கோரை கிராமத்தில் கடந்த 23.10.2025 அன்று சிவன் கோவிலில் இருந்த கோவில் பொருட்கள் திருடு போனதாக வந்த புகாரின் அடிப்படையில் அரியலூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர் .
இதில் பெரம்பலூர் மாவட்டம் புதுவேட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் .மணிவேல், கிருஷ்ணன் மகன் ராஜீவ்காந்தி , கருப்பையா மகன் சின்னதம்பி மருதமுத்து மகன் செல்லமுத்து ஆகிய நால்வரும் நெருஞ்சிக்கோரை சிவன் கோவில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரியவந்ததையடுத்து அரியலூர் நகர காவல் நிலைய காவல் ஆய்வாளர் வெங்கடேஸ்வரன் , காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நான்கு பேரையும் கைது செய்து, இன்று அக் 28 ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிமன்ற உத்தரவின்படி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
எம்.எஸ்.மதுக்குமார்.

